
ஊழல் வழக்கில் தண்டனைப் பெற்றவர்கள், வாழ்நாள் முழுவதும், தேர்தலில் போட்டியிட முடியாது என்றும், அவர் சாகும் வரை வாக்காளராக இருக்கவே தகுதி அற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா தாக்கல் செய்த பொது நல வழக்கை உச்சநீதிமன்றம் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது.
ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர்களுக்கு தற்போது 6 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞத் அஸ்வினி உபாத்யாயா பொதுநல வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார்.
அதில் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தற்போது 6 ஆண்டுகள் மட்டுமே தேர்தலில் நிற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் நிற்க தடைவிதிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் இது குறித்து உரிய பதில் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர்களை வாக்களிக்கவே தகுதியற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என அஸ்வினி உபாத்யாயா கூடுதலாக வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு, இந்திய அரசியல்வாதிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், அந்த வழக்கில், தன்னையும் ஒரு தரப்பாக இணைத்துக் கொண்டு, தன்னுடைய தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என, தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.,யான பழனிச்சாமி, உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கவுள்ளார்.
ஏற்கனவே பழனிசாமி தேர்தல் கமிஷனில், அதிமுகவின் பொதுச் செயலராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரி மனு கொடுத்து, அது விசாரணையில் உள்ளது. அந்த மனுவிலேயே, இதே மாதிரி போடப்பட்ட ஒரு வழக்கில், தேர்தல் கமிஷனின் எண்ணங்களை மேற்கோள்காட்டி, சசிகலாவுக்கு, வாழ் நாள் முழுவதும், கட்சித் தலைமைப் பொறுப்பில் இருக்க தடை விதித்து உத்தரவு போட வேண்டும் என்று, தெரிவித்திருந்தார்.
ஊழல் குற்றவாளிகளுக்கு தேர்தலில் நிற்க வாழ்நாள் தடைவிதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தனது பரிந்துரையை உச்சநீதிமன்றத்துக்கு ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், அவர்கள் வாழ்நாள் முழுவதும் வாக்களிக்கவே தகுதியற்றவர்களாக உச்சநீதிமன்றம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வரும் பட்சத்தில் தற்போது பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, அதிமுக பொதுச்செயலாளராக நீடிக்க முடியாது !…வாழ்நாள் முழுவதும் தேர்தலில் நிற்க முடியாது…!!ஏன் வாக்களிக்கவே முடியாது..!!!