
தற்போதைய சூழலில் தமிழகத்தில் பொதுத்தேர்தல் வரக்கூடாது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளுக்குள்ளும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதே தற்போதைய மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இரு அணிகளையும் இணைக்க பேச்சுவார்த்தைக்குத் தயார் என்கிறார் ஈ.பி.எஸ். இல்லை... இல்லை... விரைவில் பொதுத்தேர்தல் வரும் என்று தடதடக்கிறார் ஓ.பி.எஸ்.
இப்படி தாறுமாறு அரசியல் ஸ்டண்ட்களால் தமிழக மக்கள் தவியாய் தவித்து வரும் நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் பளிச் பேட்டி மேலும் விறுவிறுப்பைக் கூட்டியுள்ளது.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தற்போது பொதுத்தேர்தல் வரக்கூடாது என்பதே தனது கருத்து என்று பேட்டியளித்திருக்கிறார். கடந்த கால ஆட்சிமுறைகளில் மாற்றம் செய்தாலே போதும் என தெரிவித்துள்ளார்.
இத்தோடு விட்டாரா? நீர்நிலைகளை பாதுகாக்க தமிழக அரசு தவறி விட்டது என்று கூற திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தகுதியில்லை என்றும், விவசாயிகளை ஏமாற்றி திமுக அரசியல் ஆதாயம் தேடிவருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.