
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அதிமுக அரசை யாரும் கவிழ்க்க வேண்டிய அவசியமில்லை என்றும் அதே நேரத்தில் அதிமுகவினருக்கு அவர்கள் கட்சிக்குள்ளே எதிரிகள் இருப்பதால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் தற்போது தமிழக அரசு செயல் பட்டு வருகிறது என்றும் தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களை பாஜக அரசு ஆட்டுவித்து வருகிறது என பொதுவான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் குடியரசுத் தேர்தல் முடிந்தவுடன் இந்த அரசு கலைக்கப்பட்டுவிடும் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் தற்போது நடைபெற்ற வரும் ஆட்சியை கலைக்க பாஜக முயற்சி செய்யாது என தெரிவித்தார்.
திமுக தொடர்ந்து ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்தாலும் அது நடக்காது என பொன்னார் தெரிவித்தார்.
அதே நேரத்தில் அதிமுகவினருக்கு அதிமுகவினர்தான எதிரிகள் என்ற அவர் தெரிவித்தார். அதிமுகவினருக்கு அவர்கள் கட்சிக்குள்ளே எதிரிகள் இருப்பதால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.