மிஸ்டர் திருமாவளவன் குளோஸ் யுவர் மௌத்….எச்சரிக்கை விடுத்த எச்.ராஜா..

 
Published : Jun 20, 2017, 06:15 AM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
மிஸ்டர் திருமாவளவன் குளோஸ் யுவர் மௌத்….எச்சரிக்கை விடுத்த எச்.ராஜா..

சுருக்கம்

bjp national seretary h.raja press meet in kumbakonam

மிஸ்டர் திருமாவளவன் குளோஸ் யுவர் மௌத்….எச்சரிக்கை விடுத்த எச்.ராஜா..

பிரதமர் நரேந்திர மோடி குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தேவையில்லாமல் விமர்சனங்கள் செய்து வருவதாகவும் அவர் தனது நாவை அடக்கிப் பேச வேண்டும் என்றும் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா எச்சரித்துள்ளார்.

கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டிற்கு மாடுகள் வளர்ப்பது அதனை கொன்று சாப்பிடுவதற்குத்தான் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறி உள்ளார் என குறிப்பிட்ட அவர், சட்ட விரோதமாக பேசிய சீமானை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் , பிரதமர் மோடி குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் என தெரிவித்த ராஜா, திருமாவளவன்  நாவை அடக்கி பேச வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்..

சீமான், திருமாவளவன் ஆகிய இருவரையும்  அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும்என்றும் ராஜா கூறினார்.

பிரதமர் மோடியின் அரசு 3 ஆண்டுகளாக இந்திய பொருளாதாரத்தை சரியான பாதையில் நடத்தி செல்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

நேரடி வரிவிதிப்பில் ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததால் 90 லட்சம் பேர் வரி செலுத்தி உள்ளனர். தற்போது மறைமுக வரியை ஏமாற்றுபவர்கள் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இருந்து தப்ப முடியாது எனவும் கூறினார்.

சட்ட மன்றத்தில் எம்எல்ஏக்கள் பணம் பெற்றது தொடர்பாக திமுகவினர் குரல் எழுப்பினர் ஆனால்  நாகை தொகுதி எம்எல்ஏ மனித நேய ஜனநாயக மக்கள் கட்சி தமிமுன் அன்சாரி பெயரை ஏன் சேர்க்கவில்லை என கேள்வி எழுப்பினர்.

அதே நேரத்தில் பண பேர விவகாரத்தில் சரவணன் எம்.எல்.ஏ. குரலை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் எம்எல்ஏக்கள் பணம் பெற்றது உறுதி செய்யப்பட்டால் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச்,ராஜா தெரிவித்தார்.

 

 

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!