மக்களிடம் சுரண்டிய பணம் மக்களிடமே போகணும்… போயஸ் தோட்ட ரெய்டு குறித்து மனம் திறந்த பொன்னார்!!!

Asianet News Tamil  
Published : Nov 18, 2017, 12:49 PM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
மக்களிடம் சுரண்டிய பணம் மக்களிடமே போகணும்… போயஸ் தோட்ட ரெய்டு குறித்து மனம் திறந்த பொன்னார்!!!

சுருக்கம்

pon radha krishnan press meet about the raid

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டில் ஆதாரத்தின் அடிப்படையில்தான் சோதனை நடைபெற்றது என்றும் மக்களிடம் சுரண்டிய பணம் மக்களிடமே போய் சேர வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவிக்க இன்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஓட்டப்பிடாரத்திற்கு வந்தார். அவர் மெயின் பஜாரில் உள்ள வ.உ.சி.சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் செய்தியாள்களிடம் பேசி அவர், போயஸ் கார்டனில் ஆதாரத்தின் அடிப்படையில் தான் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக தெரிவித்தார்.

இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை என்று தெரிவித்த பொன்னார்,  ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தையே கொள்ளையடித்து வைத்துள்ளனர்…அவர்களிடம் இருந்தது கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என கூறினார்.

மக்களிடம் சுரண்டப்பட்ட பணம் மக்ககளிடமே போய் சேர வேண்டும் என்று குறிப்பிட்ட பொன் .ராதா கிருஷ்ணன்,  தமிழகத்தில் நடைபெறும் வருமானவரி சோதனை வரவேற்க கூடியது என்றார்.

சேகர் ரெட்டி வீட்டில் நடந்த வருமான வரி சோதனை தற்போது  ஆய்வில் உள்ளது என்றும் அது குறித்து விரைவில் முடிவு எடுப்பப்படும் என கூறினார்.  தமிழக கவர்னர் மாவட்டங்களில் ஆய்வு தான் செய்கிறார் என்றும்  அவர் நிர்வாகம் செய்யவில்லை என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

 

PREV
click me!

Recommended Stories

21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
1000, 2000 இல்ல ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10000..! பழனிசாமி ஜாக்பாட் அறிவிப்பு..