தமிழக மீனவர்கள் பொய் சொல்லுராங்க !!  அவங்களை சுட்டது இந்திய கடலோர காவல் படை இல்லை … நிர்மலா சீத்தாராமன் மறுப்பு !!!

Asianet News Tamil  
Published : Nov 18, 2017, 12:15 PM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
தமிழக மீனவர்கள் பொய் சொல்லுராங்க !!  அவங்களை சுட்டது இந்திய கடலோர காவல்  படை இல்லை … நிர்மலா சீத்தாராமன் மறுப்பு !!!

சுருக்கம்

nirmala seetharaman press meet

இந்திய கடலோர காவல் படையினர் தமிழக மீனவர்களை துப்பாக்கியால் சுட்டார்கள் என்பது தவறான தகவல் என்றும், அவர்கள் கொடுத்த குண்டுகள் கடலோர காவல் படையினரிமே இல்லை என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.

கடந்த 14 ஆம் தேதி  கச்சத் தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் ராமேஸ்வரம் மீனவர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இலங்கை மீனவர்கள் என நினைத்து தவறுதலாக தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ரப்பர் குண்டுகளைக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் மீனவர் அந்தோணிபிச்சை என்ற மீனவரின் இடது முழங்கையில் குண்டு பாய்ந்து வெளியேறி சென்றது. மற்றொரு மீனவரான ஜான்சனின் கைகளிலும் குண்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயம் அடைந்த மீனவர்கள் இருவரும் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இது தமிழக மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது குறித்து செய்தியாள்களிடம் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், இந்திய கடலோர காவல் படையினர் தமிழக மீனவர்களை துப்பாக்கியால் சுட்டார்கள் என்பது தவறான தகவல் என்றும், அவர்கள் கொடுத்த குண்டுகள் கடலோர காவல் படையினரிமே இல்லை என்றும் தெரிவித்தார்.

மீனவர்களிடம் இருந்த கைப்பற்றப்பட்ட ரப்பர் குண்டுகள், கடலோர காவல் படைக்கு சொந்தமானது அல்ல என்றும் ஆனால் இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

தமிழக மீனவர்களின் நலனில் அதிக அக்கறை கொண்டு மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருவதாகவும் நிர்மலா சீத்தாராமன் கூறினார்.

 

 

PREV
click me!

Recommended Stories

தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!