நிர்மலா சீதாராமனை சந்தித்தது ஏன்.? பாஜகவுடன் மீண்டும் கூட்டணி தொடர்பாக பேச்சா.? பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம்

By Ajmal Khan  |  First Published Oct 3, 2023, 2:50 PM IST

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை கூட்டணி தொடர்பாகவோ, அரசியல் காரணங்களுக்காவோ சந்திக்கவில்லையென அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம் அளித்துள்ளார்.


அதிமுக- பாஜக கூட்டணி முறிவு

தமிழகத்தில் அதிமுக- பாஜக இடையே கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லியில் சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக பேசினார். இதனையடுத்து இன்று காலை கோவையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, ஏ கே செல்வராஜ் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு தர்ப்புக்கும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு ஏன் என்ற கேள்வி எழுந்தது. 

Tap to resize

Latest Videos

நிர்மலா சீதாராமனை சந்தித்தது ஏன்.?

இந்தநிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தது தொடர்பாக விளக்கம் அளித்த சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், கடந்த மாதம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் சந்தித்து தென்னை விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக மனு கொடுத்தோம். கொடுத்த மனுவை மீண்டும் வலியுறுத்துவதற்காக இன்று அமைச்சரை சந்தித்தோம். இந்த சந்திப்பில் தென்னிந்திய தென்னை விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சக்தி வேலும் இருந்தார். வேறு எந்த அரசியல் காரணங்களும் இல்லை.  தென்னை நார் தொழிற்சாலை பாதிக்கப்பட்டுள்ளது,தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டது தொடர்பாக மனு கொடுக்கவே வந்தோம். 

மீண்டும் கூட்டணி தொடர்பாக பேச்சா.?

மத்திய அமைச்சரை சந்தித்து கூட்டணி தொடர்பாக எதுவும் பேசவில்லை தேங்காய் நார் தொழிற்சாலை தொடர்பாக மட்டுமே பேசினோம். மீண்டும் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்தவர் அதை தொடர்பாக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் முடிவு எடுப்பார்.  நாங்கள் சந்தித்தது கூட்டணி தொடர்பாக இல்லை எனவும் கூறினார். ஒரு தொகுதியின் எம்எல்ஏ அந்த தொகுதி உள்ள பிரச்சனைக்காகத்தான் வந்து சந்தித்தோம்.  இன்று நடைபெற்ற சந்திப்பு அரசியல் ரீதியான சந்திப்பே இல்லை.  தென்னை விவசாயிகள் கோரிக்கை தொடர்பான சந்திப்பு மட்டுமே

அரசியல் காரணங்கள் இல்லை

நான் பொள்ளாச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர், என் தொகுதி மக்கள் அனைவரும் தென்னை விவசாயிகள் அவர்களுடைய கோரிக்கை வலியுறுத்ததற்காக நான் வந்தேன்.  அதேபோல ஏ கே செல்வராஜ் எம்எல்ஏ அவர்கள் அவருடைய ஊரிலே ஒரு பேங்க் ஒன்று வேண்டும் என்பதற்காக வந்திருக்கிறார்.  எனவே அரசியல் காரண,காரியங்கள் எதுவுமே கிடையாது என திட்டவட்டமாக கூறினார். 

இதையும் படியுங்கள்

அதிமுக- பாஜக மோதல்..! நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த 3 அதிமுக எம்எல்ஏக்கள்..! காரணம் என்ன தெரியுமா.?

click me!