ஒரு ஆளுநர் ஒரு எதிர்க்கட்சி உறுப்பினர் போன்று ஒரு கட்சியின் கொள்கையை இந்த அளவுக்கு அசிங்கமாக எதிர்த்து பேசும் கேவலமான செயலை எந்த ஆளுநரும் இதுவரை செய்ததில்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
ஒரு ஆளுநர் ஒரு எதிர்க்கட்சி உறுப்பினர் போன்று ஒரு கட்சியின் கொள்கையை இந்த அளவுக்கு அசிங்கமாக எதிர்த்து பேசும் கேவலமான செயலை எந்த ஆளுநரும் இதுவரை செய்ததில்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஞாலம் ஊராட்சியில் நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோத தங்கராஜ் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பொதுமக்களின் குறைகளை அவர்கள் கேட்டறிந்து அதன் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் மனோ தங்கராஜ் உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- கொள்கை ரீதியாக சமூக நீதி கோட்பாட்டை கொண்டவர்கள் அதிமுகவினர். ஆனால் அதற்கு நேர் எதிர் கொள்கை கொண்டவர் அண்ணாமலை அவர் கூட்டணியில் இருந்ததே ஒரு அட்ஜஸ்ட்மெண்ட் தான். ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் ஒவ்வொரு கடமை உள்ளது என்று அண்ணாமலை கூறுகிறார். ஆனால் அவரது சமூகத்துக்கான கடமையை அண்ணாமலை செய்கிறாரா? அதுவே ஒரு அட்ஜஸ்ட்மென்ட்.
கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகள் குமரி கொண்டு வருவதை தடுக்கும் விதமாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகிறது மேலும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளோம். ஒரு ஆளுநர் ஒரு எதிர்க்கட்சி உறுப்பினர் போன்று ஒரு கட்சியின் கொள்கையை இந்த அளவுக்கு அசிங்கமாக எதிர்த்து பேசும் கேவலமான செயலை எந்த ஆளுநரும் இதுவரை செய்ததில்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.