முன்னாள் முதல்வருக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை.! திமுக அரசை விளாசும் பொள்ளாச்சி ஜெயராமன்

By Ajmal KhanFirst Published Mar 15, 2023, 1:41 PM IST
Highlights

முன்னாள் முதலமைச்சருக்கே பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும் அளவிற்கு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு உள்ளது என  அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம் சாட்டியுள்ளார். 

இபிஎஸ் மீது வழக்கு பதிவு

சிவகங்கை மற்றும் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து விமான மூலம் மதுரைக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்தார். அப்போது,   அவரோடு சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த ராஜேஸ்வரன் பயணம் செய்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை வீடியோ எடுத்து பேஸ்புக் லைவ் செய்த ராஜேஸ்வரன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசினார். இதன் காரணமாக ஏற்பட்ட மோதலையடுத்து  இரண்டு தரப்பு மீதும் மதுரை மாநகர காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரட்டை இலை சின்னமும், அதிமுகவும் துரோகிகள் கையில் சிக்கிக் கொண்டுள்ளது.! - டிடிவி தினகரன் ஆவேசம்

முன்னாள் முதல்வருக்கு பாதுகாப்பு இல்லை

இந்தநிலையில் கோவையில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில்,சூலூர் கந்தசாமி, அம்மன் அர்ஜுன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500 பேர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவிற்கு எதிராகவும், எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன், மக்கள் திமுக மீது கோபமாக உள்ளதாக தெரிவித்தவர்,  முன்னாள் முதல்வருக்கே பாதுகாப்பற்ற சூழல் தமிழகத்தில் நிலவுவதாக விமர்சித்தார். எனவே தமிழகத்தில்  சட்டம் ஒழுங்கு எப்படி உள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருப்பதாக தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

மனிதவெடிகுண்டாக அதிமுக தொண்டர்கள் மாறுவார்கள்..! ஸ்டாலினுக்கு எதிரான போராட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

click me!