ஆர்.கே.நகரில் வெற்றி பெறுவது எப்படி: ஜோதிடர்களை நாடும் அரசியல் குடும்பங்கள்!

 
Published : Apr 06, 2017, 03:09 PM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
ஆர்.கே.நகரில் வெற்றி பெறுவது எப்படி: ஜோதிடர்களை நாடும் அரசியல் குடும்பங்கள்!

சுருக்கம்

Political leaders are approach to Astrologers for RK Nagar Result

தேர்தலில், நம்மவர்கள் வெளியிடும் கருத்து கணிப்புகள் மீது, நம் அரசியல் தலைவர்களுக்கு நம்பிக்கை இல்லை. தாங்களாக நியமிக்கும் சர்வே நிபுணர்களின் ஆய்வையும், பண விநியோகம் சாய்த்து விடுகிறது.

அதனால், ஜோதிடர்களின் கணிப்புகளை முழுமையாக நம்ப  ஆரம்பித்துள்ளனர் நமது அரசியல் தலைவர்கள். அதிமுக போன்ற சில கட்சிகளின் ஜோதிட தொடர்புகள் வெளிப்படையாக தெரியும்.

ஆனால் திமுகவின் ஜோதிட தொடர்புகள், வெளியில் தெரியாதவாறு, கவனமாக ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும். ஆனால், அந்த குடும்பமும், தற்போது ஜோதிடர்களின் ஆலோசனையை நேரடியாக கேட்க ஆரம்பித்துள்ளது.

சென்னையில் உள்ள விளம்பர ஜோதிடர் "தரன்" என்பவரை, ஸ்டாலின் குடும்பத்தினர், நேரடியாக அடிக்கடி வீட்டுக்கு அழைத்து, வெற்றிக்கு என்ன பரிகாரம், ஹோமம் செய்ய வேண்டும் என்று கேட்டு அதன்படி செய்ய ஆரம்பித்துள்ளனர்.

அவர், நாட்டு நடப்புகளை கணித்து சொல்லும்  அளவுக்கு பெரிய ஜோதிடர் இல்லை என்றாலும், அவருடைய குரு மிகவும் கெட்டிக்காரர் என்று சொல்லப்படுகிறது.

அதனால், திமுக குடும்பம் கேட்கும் கேள்விகளை, தமது குருநாதரிடம் கேட்டு, கேட்டு அவ்வப்போது பரிகாரங்களை கூறி வருகிறார். திமுக குடும்பமும் அதை அப்படியே பின்பற்றி வருகிறது.

பகுத்தறிவு கொள்கையை மேடைக்கு மேடை பிரச்சாரம் செய்யும் திமுகவும் இப்படியா? என்று அந்த கட்சியினரே வெறுத்து போயுள்ளனர் என்பதே லேட்டஸ்ட் தகவல்.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!