ம.பி யில் தாக்கிய அரசியல் கொரோனா... மராட்டியத்திற்குள் வர முடியாது.! ரெட் அலர்ட் கொடுக்கும் கட்சிகள்...!!

By Thiraviaraj RMFirst Published Mar 12, 2020, 8:08 AM IST
Highlights

மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. அங்கு சமீப காலமாக அரசியல் வானிலை சரியில்லாமல் இருந்து வருகிறது. ம.பி காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்ய கூடாது என்று பாஜக விரும்புவதாக முதல்வர் கமல்நாத் குற்றம் சுமத்தியுள்ளார்.இந்தநிலையில், திடீர் திருப்பமாக காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அந்த கட்சியை சேர்ந்த 22 எம்.எல்.ஏ.க்கள் திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதன்காரணமாக மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
 
 சிவசேனா மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கொரோனா தொற்றுடன், இந்த பிரச்சினையை ஒப்பிட்டு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் " மத்திய பிரதேசத்தில் உருவாகியிருக்கும் வைரஸ் மராட்டியத்திற்குள் நுழையாது. மராட்டிய ஆட்சியானது வித்தியாசமானது. 100 நாட்களுக்கு முன்பு ஒரு அறுவை சிகிச்சை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து மகா விகாஸ் அகாடி பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொண்டு மராட்டியத்தை காப்பாற்றியது. சிவசேனா கூட்டணி அரசு பாதுகாப்பாக உள்ளது".என்று பதிவிட்டிருக்கிறது.

இதேபோல் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சரத்பவார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மத்திய பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட நிலைமை மராட்டியத்திலும் ஏற்படுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து சரத்பவார்  “ மத்திய பிரதேசம் போன்ற சூழ்நிலை மராட்டியத்தில் இல்லை. மராட்டியத்தில் மகா விகாஸ் அகாடி கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சரியான பாதையில் சென்றுகொண்டு இருக்கிறது. உண்மை என்னவென்றால் மராட்டிய அரசுக்கு எதிராக எழுத ஊடகங்களுக்கு இதுவரை எதுவும் கிடைக்கவில்லை. அப்படியானால் எல்லாம் சரியான முறையில் நடக்கிறது” என்றார்.

click me!