பழனி கோவிலுக்கு யாரெல்லாம் வர தடை? கோவில் நிர்வாகம் விளக்கம்!!

By Thiraviaraj RMFirst Published Mar 12, 2020, 7:45 AM IST
Highlights

கொரோனா வைரஸ் நம்மை விடாமல் துரத்தலாம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் செல்ல வேண்டாம். இதன் மூலம் நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதற்காகவே , பழனி கோவில் நிர்வாகம் உடல்நலம் சரியில்லாதவர்கள், ஜலதோஷம்,இருமல் இருப்பவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்கலாம் என்று அறிவிப்பு கொடுத்திருக்கிறது. 

T.Balamurukan

 இதுகுறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்...,"
 பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலுக்கு இருமல், சளி, ஜலதோஷம், மூச்சுத் திணறல் உள்ள பக்தர்கள் வருவதையும், திருவிழா காலங்களில் கலந்து கொள்வதையும் தவிர்க்க வேண்டும். மருத்துவ உதவி தேவைப்படும் பக்தர்கள் மலைக்கோயில் ரோப் கார், மின் இழுவை ரயில் நிலையம், படிப்பாதை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா நோய்த் தடுப்பு முதலுதவி சிகிச்சை மையங்களில் உள்ள மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!