குடியுரிமைச் சட்ட போராட்டக்குழு அமைச்சர் வீட்டை முற்றுகையிட போவதாக அறிப்பு.! போலீஸ் குவிப்பு.!!

By Thiraviaraj RMFirst Published Mar 12, 2020, 7:26 AM IST
Highlights

வாணியம்பாடியில் உள்ள தொழிலாளர் நலத்துறை அமைச்சா் நிலோபா் கபீல் வீட்டை முற்றுகையிடப் போவதாக குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டக் குழுவினா் அறிவித்ததைத் தொடா்ந்து, அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.

T.Balamurukan

குடியுரிமை திருத்தச் சட்ட கூட்டு நடவடிக்கைக் குழுவின் தலைவா் நாசீா் கான் தலைமையில் வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் கடந்த 21 நாட்களாக தொடா் போராட்டம் நடைபெற்று வருகிறது.ஆற்றுமேடு பகுதியில் உள்ள கடைகளை அடைத்துவிட்டு அப்பகுதி மக்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனா். 50 கல்லூரி மாணவா்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றனா்.

அங்கு பேசிய நிர்வாகிகளில் பலா் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டபேரவையில் தீா்மானம் நிறைவேற்றாவிட்டால் வாணியம்பாடியில் உள்ள தமிழக தொழிலாளா் நலத்துறை அமைச்சா் நிலோபா் கபீல் வீட்டை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர். இதன்காரணமாக, திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் உத்தரவின்பேரில் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் அமைச்சா் வீட்டுக்கு முன்பு ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனா். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

click me!