தந்தை வசந்தகுமாரையே விஞ்சும் அரசியல் பண்பு.. திமுக அமைச்சரை நேரில் சந்தித்து பாராட்டிய எம்.பி விஜய் வசந்த்.

Published : Jun 15, 2021, 09:29 AM IST
தந்தை வசந்தகுமாரையே விஞ்சும் அரசியல் பண்பு..  திமுக அமைச்சரை நேரில் சந்தித்து பாராட்டிய எம்.பி விஜய் வசந்த்.

சுருக்கம்

அதேபோல் தமிழக அரசினால் நிர்ணயிக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் பயிலும் மாணவர்கள் சொல்ல ஆசிரியர்கள் எழுதும் scribe திட்டத்தின் மூலம்  10, 12 ஆம் வகுப்பு மாணவர்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.  

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தமிழக உயர்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சென்னை தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். 

இந்த சந்திப்பின் போது பத்தாம் வகுப்பு 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்வதாக கூறினார். அதேபோல் தமிழக அரசினால் நிர்ணயிக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் பயிலும் மாணவர்கள் சொல்ல ஆசிரியர்கள் எழுதும் scribe திட்டத்தின் மூலம்  10, 12 ஆம் வகுப்பு மாணவர்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.  

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தேவையான கல்வி துறை சார்ந்த கோரிக்கையையும் மாணவர்கள் நலன் சார்ந்த விசயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொது செயலாளர் எம் எஸ் காமராஜ் தமிழ்நாடு வர்த்தக காங்கிரஸ் செயல் தலைவர் எம். ஜி ராமசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
 

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை