12 முறை தடுப்பூசி போட்டவரின் வீட்டில் சோதனை.. கதவை உடைத்து உள்ளே நுழைந்த போலீஸ்.. கதறும் குடும்பம்.

By Ezhilarasan BabuFirst Published Jan 10, 2022, 4:50 PM IST
Highlights

இதுகுறித்து பிரம்மதேவனின் மனைவி நிர்மலா தேவி கூறுகையில், போலீசாரால் தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளதாகவும், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு கணவரின் உடல் நிலையில் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் அதன் காரணமாகவே அவர் அடிக்கடி தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.  

வெவ்வேறு அடையாள அட்டைகளை வைத்து 12 முறை தடுப்பூசி போட்ட முதியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவரின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று போலீசார் சோதனை நடத்தி அவரது குடும்பத்தினரைஅச்சுறுத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தடுப்பூசியால் மட்டுமே வைரஸிலிருந்து பாதுகாக்க முடியும் என்பதால் நாடு முழுவதும் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசியில் வழங்கப்பட்டு வருகிறது. அனைவரும் தவறாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென தீவிர பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முதியோர் ஒருவர் பல்வேறு ஆவணங்களை காண்பித்து 11 முறை தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டுள்ள பகீர் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பீகார் மாநிலம்  மாதேபுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரம்மதேவ் மண்டல்  84 வயதான இவர் 11 முறை தடுப்பு செய்துகொண்டுள்ளார். 12வது முறை தடுப்பூசி சேர்த்துக் கொள்ள முயன்றபோது பிடிபட்டார், தபால் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி முதல் டிசம்பர் 30-ஆம் தேதி வரை பல்வேறு ஆவணங்களை காண்பித்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளார் அவர். அதாவது 13 பிப்ரவரி 2021 அன்று, புரைனி PHC'யில் முதல் டோஸ், மார்ச் 13 அன்று புரைனி PHC இல் இரண்டாவது டோஸ், மே 19 அன்று அவுராய் துணை சுகாதார மையத்திலும் மூன்றாவது டோஸ், 

நான்காவது தடுப்பூசி ஜூன் 16 அன்று பூபேந்திர பகத்தின் ஒதுக்கீட்டு முகாமிலும் , ஐந்தாவது டோஸ் 24 அன்று ஜூலை மாதம் புரைனி பாடி ஹாட் பள்ளி முகாமிலும், ஆறாவது டோஸ் ஆகஸ்ட் 31 ஆம் தேதி நாத்பாபா இட முகாமிலும், ஏழாவது டோஸ் செப்டம்பர் 11 ஆம் தேதி பாடி ஹாட் பள்ளியிலும், எட்டாவது தடுப்பூசி செப்டம்பர் 22 ஆம் தேதி பாடி ஹாட் பள்ளியிலும். 9வது டோஸ் செப்டம்பர் 24 அன்று கலாசனில் உள்ள சுகாதார துணை மையத்திலும் செலுத்திக் கொண்டுள்ளார். இதேபோல கடந்த வாரம் சௌசா பிஎச்சியில் தடுப்பூசியின் 12வது டோஸ் செலுத்திக் கொள்ள முயன்றபோது சுகாதாரப் பணியார்களிடம் முதியவர் சிக்கினார். 

இதனையடுத்து முதியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஏமாற்றுதல், அரசு சொத்துக்களை அழித்தல் மற்றும் அரசு உத்தரவை மீறுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து முதியவர் பிரம்மதேவ் மண்டல் கூறுகையில், தடுப்பூசி போட்டதால் எனக்கு பலன் கிடைத்தது. அதனால் மீண்டும் மீண்டும் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். இதில், 12 முறை ஆய்வு செய்யாமல் தடுப்பூசி போட்டது சுகாதாரத்துறையின் அலட்சியமே தவிற எனது தவறு ஒன்றுமில்லை, ஆனால் அதை மறைப்பதற்காகவே என் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறியிருந்தார். இந்நிலையில் போலீசார் முதியவர் பிரம்மதேவ் மண்டலின் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். ஆனால் அப்போது அவர் வீட்டில் இல்லை, எனவே போலீசார் வலுக்கட்டாயமாக அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து பிரம்மதேவனின் மனைவி நிர்மலா தேவி கூறுகையில், போலீசாரால் தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளதாகவும், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு கணவரின் உடல் நிலையில் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் அதன் காரணமாகவே அவர் அடிக்கடி தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.  உடல்நிலை மீது அக்கறை காட்டியது குற்றமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தனது கணவர் குற்றவாளி அல்ல என்றும் ஆனால் போலீசார் அவரை குற்றவாளி போல நடத்துகிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 
 

click me!