5 மாதங்களில் 12 பேர் பலி.. இனியும் பொறுக்க முடியாது.. அவசர சட்டத்தை உடனே அமலாக்குங்கள்.. பொங்கிய அன்புமணி

Published : Jan 10, 2022, 04:14 PM ISTUpdated : Jan 10, 2022, 04:15 PM IST
5 மாதங்களில் 12 பேர் பலி.. இனியும் பொறுக்க முடியாது.. அவசர சட்டத்தை உடனே அமலாக்குங்கள்.. பொங்கிய அன்புமணி

சுருக்கம்

கடந்த 5 மாதங்களில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதில் தமிழக அரசு இனியும் கால தாமதம் செய்யக்கூடாது என்றும் பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  

சென்னை கோயம்பேட்டை சேர்ந்தவர் தினேஷ். இவர் சின்மயா நகரில் பிரவுசிங் செண்டர் நடத்தி வருகிறார். இவர் ஆன்லைன் சூதாட்டத்தில், பணத்தை இழந்த வேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். மேலும் ஆன்லைன் ரம்மி ஆட்டத்தில் லட்சகணக்கில் அவர் பணத்தை இழந்து மேலும் குடிபழக்கத்திற்கு அடிமையாகி தற்கொலை செய்துக்கொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.மேலும் தற்கொலை செய்துக்கொண்ட தினேஷின் செல்போனை கைபற்றிய போலீசார், சைபர் கிரைம் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல் கடந்த வாரம் சென்னையடுத்த பெருங்குடியை சேர்ந்தவர் மணிகண்டன். ஆன்லைன் ரம்மி விளையாடி ஏற்பட்ட கடன் பிரச்சினை காரணமாக மனைவி, இரண்டு குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலையால் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மணிகண்டன் தனியார் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். ஆனால், கடந்த இரண்டு மாத காலமாக அவர் வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். மேலும், மனிகண்டன் அவரது நண்பர்களிடத்தில் பல லட்சம் ரூபாய், கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. கடன் பிரச்சினை காரணமாக கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தக் கடனுக்கு அவர் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாக இருந்ததே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே ஆன்லைன் விளையாட்டில் மணிகண்டன் ரூ.1 கோடி வரை இழந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அவரது செல்போனைக் கைப்பற்றிய போலீஸார் அதனை சைபர் பிரிவுக்கு அனுப்பியுள்ளனர்.ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து மன உளைச்சலில் தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இதுக்குறித்து பாமக அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடனாளியான சென்னை கோயம்பேட்டைச் சேர்ந்த தினேஷ் என்ற இளைஞர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கோயம்பேடு தினேஷ் கடந்த 5 மாதங்களில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகும் 12-ஆவது உயிர். ஆன்லைன் சூதாட்டம் உடனடியாக தடை செய்யப்படாவிட்டால் தினமும் இத்தகைய தற்கொலைகள் நடப்பதும், பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதும் வாடிக்கையான ஒன்றாகி விடும்.ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதில் தமிழக அரசு இனியும் தாமதம் செய்யக்கூடாது. தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்றுவதற்காக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டத்தை அனைத்து காரணங்களுடன் உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் பதிவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!