"தமிழகத்தை அழிக்க காங்கிரஸ் நாடகம்" ..? 19 ஆம் தேதிக்கு பயங்கர பிளான்..! ஸ்டாலினை அலர்ட் செய்யும் விவசாயிகள்.

Published : Jan 10, 2022, 03:00 PM ISTUpdated : Jan 10, 2022, 03:01 PM IST
"தமிழகத்தை அழிக்க காங்கிரஸ் நாடகம்" ..? 19 ஆம் தேதிக்கு பயங்கர பிளான்..! ஸ்டாலினை அலர்ட் செய்யும் விவசாயிகள்.

சுருக்கம்

காங்கிரஸ் கட்சி நடத்துகிற அரசியல் நாடகத்திற்கு தமிழக விவசியகள் அமைதி காக்க முடியாது என பி. ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். தமிழக காவல்துறை இயக்குனரை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அனைத்து விவசியகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி. ஆர்.பாண்டியன் இவ்வாறு கூறினார். 

காங்கிரஸ் கட்சி நடத்துகிற அரசியல் நாடகத்திற்கு தமிழக விவசியகள் அமைதி காக்க முடியாது என பி. ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். தமிழக காவல்துறை இயக்குனரை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அனைத்து விவசியகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி. ஆர்.பாண்டியன் இவ்வாறு கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், கர்நாடக அரசு காவேரி நதி நீர் குறுக்கே அணைகட்டுவதில் தமிழகத்தை அழிக்க துடிக்கிறார்கள் கர்நாடக அரசியல் வாதிகள் காங்கிரஸ் கட்சி தன் அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக கர்நாடகாவில் முடிந்து போன காவேரி பிரச்னை காவேரி மேலாண்மை அமைக்கப்பட்டு தன்னாட்சி அதிகாரத்தோடு இன்று செயல்படும் நிலையில் ஆணையத்தை அச்சுறுத்தும் வகையிலும், தமிழகத்தை அழிக்கும் நோக்கோடும் அரசியல் சுயலாபத்திற்காக காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் அணை கட்ட வலியுறுத்தி நேற்று துவங்கியுள்ள பேரணி வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

இதனை தடுத்த நிறுத்த மத்திய அரசும் கர்நாடக அரசும் முன்வர வேண்டும். பின்வாங்கவில்லை என்றால் தமிழக விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைத்து வரும் 18ஆம் தேதி திருவாரூரில் துவங்கி 19ஆம் தேதி மேகதாது பகுதியை முற்றுகையிட முடிவு கேட்டு அதற்கான அனுமதி கேட்டு விண்ணபம் கொடுத்துள்ளோம். அனுமதியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் வழங்க மறுத்தால் தடையை மீறி காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தை கண்டித்தும்,மத்திய அரசை அதில் தடுத்து நிறுத்தி காவேரி மேலாண்மை ஆணையத்தை தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்படுதத்துவதற்கு வெளிப்படையாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி நாங்கள் பேரணியை துவக்க உள்ளோம்.

கொரோனோ விதிமுறைகளுக்கு உட்பட்டு எந்தளவு சாத்தியம் உள்ளதோ அதற்கேற்ப ஏற்பாடுகள் செய்கிறோம் என்று கூறியுள்ளார்கள்.நிச்சயம் தமிழக முதல்வர் இதற்கு அனுமதி வழங்க வேண்டும். காங்கிரஸ் கட்சி நடத்துகிற அரசியல் நாடகத்திற்கு தமிழக விவசியகள் அமைதி காக்க முடியாது என்பதை தமிழக அரசும் கடந்த கால ஆட்சியில் எங்களோடு இணைந்து போராடியவர் தான் இன்றைய முதல்வர்.எனவே நிச்சயம் இந்த அவசர கால எங்களது போராட்டத்திற்கு நிச்சயம் அவர் அனுமதி கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!