
தீர்ப்பை அடுத்து அதிவிரைவு அதிரடிபடை கூவத்தூர் ரிசார்ட்டுக்குள் நுழைந்தது. எம்.எல்.ஏக்களை மீட்பதற்காக இந்த நடவடிக்கை என்று கூறப்படுகிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து 4 ஆண்டு சிறை 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது என்பதால் சசிகலாவின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்துள்ளது.
4 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பு 10 கோடி ரூபாய் அபராதம் வழங்கப்பட்டுள்ளதால் சசிகலா இனி முதல்வராக முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. முதல்வர் பதவியிலிருந்து ஓபிஎஸ்சை அகற்றும் பணியில் சசிகலா இறங்கினார்.
இதனால் ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கினார். இதையடுத்து சில எம்.எல்.ஏக்கள் , எம்பிக்கள் ஓ.பன்னீர் செல்வம் பக்கம் வந்தனர். சசிகலா தரப்பு எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவராக ஓபிஎஸ் அணிக்கு வர வந்தவர்கள் தங்களுடன் உள்ளவர்க்ளும் வர தயாராக உள்ளனர் ஆனால் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர்.
இதனால் அவர்களை போலீசார் உள்ளே நுழைந்து அதிரடியாக மீட்கப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது. நேற்றிரவே சசிகலா அங்கு தங்கிவிட்டார். இதே போல் இரண்டு ஐஜிக்கள் தலைமையில் போலீசாரும் நேற்றிரவு முதல் கூவத்தூரில் முகாமிட்டனர்.
இந்நிலையில் தீர்ப்பு வெளியானதை ஒட்டி கூவத்தூருக்குள் 200 அதிவிரைவு அதிரடி படை போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்துள்ளனர். அவர்கள் எம்.எல்.ஏக்களை மீட்டு வன்முறையாளர்களை விரட்டி அடிப்பார்கள் என தெரிகிறது.