சசிகலா கூடாரம் காலியாகிறது..!!! - ஓபிஎஸ் வெற்றி நிச்சயம்

Asianet News Tamil  
Published : Feb 14, 2017, 11:02 AM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
சசிகலா கூடாரம் காலியாகிறது..!!! - ஓபிஎஸ் வெற்றி நிச்சயம்

சுருக்கம்

உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து 4 ஆண்டு சிறை 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது என்பதால் சசிகலாவின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்துள்ளது.இதையடுத்து அவரது கூடாரம் காலியாகிறது. ஓபிஎஸ் கை ஓங்குகிறது. 

4 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பு 10 கோடி ரூபாய் அபராதம் வழங்கப்பட்டுள்ளதால் சசிகலா இனி முதல்வராக முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார் சசிகலா. பின்னர் திடீரென்று தானே முதல்வர் என்று அறிவித்து முதல்வராக தன்னை தேர்வு செய்யும் வேலையில் இறங்கினார். 

இதனால் ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கினார். இதையடுத்து சில எம்.எல்.ஏக்கள் , எம்பிக்கள் ஓ.பன்னீர் செல்வம் பக்கம் வந்தனர். சசிகலா தரப்பு எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவராக ஓபிஎஸ் அணிக்கு வர வந்தவர்கள் தங்களுடன் உள்ளவர்க்ளும் வர தயாராக உள்ளனர் ஆனால் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர்.

இதனால் சசிகலா தரப்பில் பெரிய அளவில் பின்னடைவு ஏற்பட்டதால் சசிகலாவின் கூடாரம் முற்றிலும் காலியாகும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதன் மூலம் ஓபிஎஸ்சின் கை வலுக்கும் என தெரிகிறது.  

PREV
click me!

Recommended Stories

TN Politics: இந்தியா கூட்டணி கூட்டத்தை கைகழுவிய திமுக! அறிவாலயம் முடிவுக்கு பின்னணியில் கமலாலயம்? பரபரப்பு தகவல்!
TVK vs DMK: புறக்கணித்த மேயர்... புறந்தள்ளிய எம்.எல்.ஏ! அரசு விழாவில் அரங்கேறிய பனிப்போர்! சென்னையில் அரங்கேறும் ‘ஈகோ’ யுத்தம்!