
சொத்துகுவிப்பு வழக்கில் சட்டரீதியான விளைவு அரசியல் ரீதியான விளைவு , தீர்ப்பு பலவித மாற்றங்களை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சசிகலா உள்ளிட்ட நான்கு பேருக்கும் தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம். சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளி என தீர்ப்பு அளித்துள்ளது உச்சநீதிமன்றம்.
சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கில் இரண்டு நீதிபதிகள் அமர்வு கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்தது. இதன் மூலம் நான்காண்டு தண்டனை உறுதியாகியுள்ளது.இதையடுத்து 10 ஆண்டுகளுக்கு சசிகலா தேர்தலில் நிற்க முடியாது.
இதையடுத்து இருவரும் உடனடியாக 4 வார காலத்துக்குள் சரணடைய வேண்டும் சரணடைய வேண்டும். கீழ் நீதிமன்ற தீர்ப்பு பொருந்தியுள்ளதால் சிறைதண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு நீதிபதிகளும் ஒரே கருத்தை வைத்துள்ளனர்.