விதிமுறைகளை மீறி சுவர் விளம்பரம்... ஒரே நாளில் 80 வழக்குகள் பதிவு செய்த திருவாரூர் போலீஸ்...

Published : Jan 06, 2019, 01:19 PM IST
விதிமுறைகளை மீறி சுவர் விளம்பரம்... ஒரே நாளில் 80 வழக்குகள் பதிவு செய்த திருவாரூர் போலீஸ்...

சுருக்கம்

தேர்தல் தேதி அறிவித்தவுடன் அரசியல் கட்சியினர் சுவர் விளம்பரம் செய்ய விதிமுறைகளை மீறி விளம்பரம் செய்ததாக வழக்கு பதிவு செய்துள்ளது போலீஸ்.

மறைந்த கருணாநிதியின் தொகுதியான திருவாரூரில் ஜனவரி 28ஆம் தேதி இடைத் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டவுடன் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. 

ஒரு பக்கம் செம்ம ஸ்பீடாக வேட்பாளர் அறிவித்த தினகரன், இன்னொரு பக்கம் தேர்தலுக்கு தடைகேட்டு ஒரு கூட்டத்தை கோர்ட்டுக்கு அனுப்பிவிட்டு வேட்பாளரை காட்டிய திமுக. மற்றொரு பக்கம் தேர்தல் நடக்குமா நடக்காதா என யோசித்துக்கொண்டே நேர்காணல் நடத்தும் அதிமுக,  இப்படி செம்ம  சூடாக நகர்கிறது தமிழக அரசியல் களம். 

இந்நிலையில், பிரசாரம் தொடங்கும் முன்பாக திருவாரூர் தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவர் விளம்பரம் செய்ததாக 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் விதிகளை மீறியதாக போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும் பல பிரிவுகளில் வழக்கு பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!