வெளியூர் அடியாட்கள் தங்கியுள்ளனரா? - லாட்ஜ்களில் போலீசார் அதிரடி சோதனை

 
Published : Feb 11, 2017, 03:27 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
வெளியூர் அடியாட்கள் தங்கியுள்ளனரா? - லாட்ஜ்களில் போலீசார் அதிரடி சோதனை

சுருக்கம்

தமிழக அரசியல் சூழ்நிலை குழப்பத்தில் உள்ள நிலையில் சென்னை முழ்தும் கலவரத்தை தூண்டும் வகையில் வெளியூரிலிருந்து அடியாட்கள் அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அதிரடி சோதனையை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

தமிழக அரசியலில் அதிரடி மாற்றமாக அதிமுக இரண்டாக பிளவுபட்டு கிடக்கிறது. சென்னையில்  ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரது இல்லத்திலும், போயஸ் தோட்டத்தில் சசிகலா ஆதரவாளர்கள் அவரது இல்லத்தில் குவிந்துள்ளனர்.

இந்நிலையில் நாளுக்கு நாள் சசிகலா ஆதரவாளர்கள் ஓபிஎஸ் பக்கம் சாய துவங்கியுள்ளனர். இதனால் சசிகலா தரப்பினர் பதற்றம் அடைந்துள்ளனர். ஆரம்பத்தில் தான் மிரட்டப்பட்டதாக ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் மீது தாக்குதல் நடக்கலாம் என்பதால் அவருக்கு பவுன்சர்கள் எனப்படும் அடியாள் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பில் தங்களை மிரட்டுவதாக சசிகலா தரப்பில் , சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்டோர் பேட்டி அளித்தனர். தமிழக உளவுத்துறை போலீசாருக்கு சென்னையில் பிரச்சனையை ஏற்படுத்தும் வண்ணம் 1000 க்கும் மேற்பட்ட அடியாட்கள் இரண்டு  தரப்பிலும் இறக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வன்முறையில் ஈடுபட வாய்ப்புள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. 

கட்சிக்காரர்கள் போர்வையில் இவர்கள் சென்னை முழுதும் திருமண மண்டபங்கள் , தனியார் தங்கும் விடுதிகள் , மேன்ஷன்கள் , ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து சென்னையில் உள்ள முக்கிய தங்கும் விடுதிகள் அமைந்துள்ள திருவல்லிக்கேணி , மண்ணடி , பாரிமுனை , மைலாப்பூர் , தி.நகர் உள்ளிட்ட இடங்களிலும் , சென்னையில் உள்ள திருமண மண்டபங்களிலும் போலீசார் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

கட்சிக்காரர்கள் போர்வையில் தங்கியிருந்தால் அவர்கள் பெயர் , செல்போன் எண்கள் , முகவரி , போட்டோ வாங்கப்படுகிறது.இதே போல் எம்.எல்.ஏ ஹாஸ்டலிலும் மைலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

PREV
click me!

Recommended Stories

களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி
அல்லாஹவிடம் ஒப்படைக்கிறோம்..! ஹாதியின் மந்திரம் தொடர்ந்து எதிரொலிக்கும்..! உஸ்மான் இறுதிச் சடங்கில் யூனுஸ் சூளுரை..