யார் எப்படி வேணும்னாலும் அடிச்சிக்கோங்க... நான் கருவேல மரத்தை வெட்டுறேன்

 
Published : Feb 11, 2017, 03:04 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
யார் எப்படி வேணும்னாலும் அடிச்சிக்கோங்க... நான் கருவேல மரத்தை வெட்டுறேன்

சுருக்கம்

தமிழகத்தில்,  அதிமுக  கட்சியிடையே ஏற்பட்ட பிளவு காரணமாக  பெரும்  பரபரப்பு  நிலவி வரும் நிலையில்,  ரொம்ப கூலாக  கருவேல மரத்தை  வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார்  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

சொந்த ஊரான கலிங்கப்பட்டி கிராமம் :  

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டி கிராமத்தில் கருவேல மரத்தை  வெட்டி அகற்றும் பணியில், இன்று  ஈடுபட்டு உள்ளார்.  

மற்ற கிராமங்கள் :

தன்னுடைய சொந்த கிராமம் மட்டுமின்றி, சுற்றியுள்ள பிள்ளையார்க்குப்பம் மற்றும் வீரனார்புரத்திலும் தொடர்ந்து கருவேல  மரத்தை  அகற்றும் பணியில்  ஈடுபட்டுள்ளார்  வைகோ. குறிப்பாக தனது கட்சியின் அடையாளம் எதுவும் இல்லாமல் மாணவர்கள்  மற்றும் இளைஞர்களோடு ஊர் பொதுமக்களும் இணைந்து கொண்டு சீமைக்கருவேல மரங்களை, வைகோ  அகற்றி வருகிறார்  என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை

இதற்கு முன்னதாக , சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதியரசர் செல்வம் மற்றும் நீதியரசர் கலையரசன் அப்பகுதியில் உள்ள 13 மாவட்டத்தை சேர்ந்த ஆட்சியர்களுக்கு அப்பகுதியில் உள்ள கருவேல மரத்தை அகற்ற உத்தரவு பிறபித்தார். இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்  மதிமுக பொதுச் செயலாளர்   வைகோ என்பது குறிப்பிடத்தக்கது.

களத்தில்  இறங்கிய வைகோ :

கருவேல  மரங்களை  அகற்றுவதற்கு முயற்சி மேற்கொண்டது  மட்டுமல்லாது தற்போது,   களத்தில் இறங்கி  தானே கருவேல மரங்களை  வெட்டி அகற்றும் பணியில் மும்முரமாக  இறங்கி பணியாற்றி வருகிறார் வைகோ

மதுரை நீதிமன்றத்தில் நேற்று :

இந்நிலையில், நேற்றைய தினம் மதுரை நீதிமன்றத்தில் தமிழகத்தில் மீதமுள்ள 19 மாவட்டங்களில் உள்ள சீமைக்கருவேல மரத்தை அகற்ற  முயற்சி  மேற்கொண்டு , அது குறித்த  கருத்தை  நேற்று  செய்தியாளர்களை  சந்தித்து வைகோ தெரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதிலிருந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தில்  இருந்தும்  சீமை கருவேல மரங்களை அகற்றும் வரை, அவர் ஓய மாட்டார்  என  தெரிகிறது.

பரபரப்பு  சூழலில் கூலாக மரத்தை  வெட்டும் வைகோ

தமிழக அரசியலில்,  ஒரு விதமான அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், பெரும் பரபரப்புடன்  மற்ற  கட்சிகள் உற்று  கவனித்து வரும்  போது,  மதிமுக  பொதுச்செயலாளர் வைகோ  ரொம்ப கூலாக  கருவேல மரத்தை  வெட்டி அகற்றும் பணியில்  ஈடுப்பட்டு  இருப்பது,  மக்களின் கவனத்தை சற்று தன் பக்கம்  திரும்ப  வைத்துள்ளது   என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு