எவ்வளவோ படிச்சு படிச்சு சொல்லியும் கேட்கல.. நேற்று மட்டும் 13,143 பேர் மீது வழக்கு.. போலீஸ் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published May 31, 2021, 1:02 PM IST
Highlights

தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நேற்று மட்டும் 13 ஆயிரத்து 143 வழக்குகள் பதியப்பட்டுள்ளது, கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் இதுவரை முகக் கவசம் அணியாதவர்கள் மீது 11 லட்சத்து 95 ஆயிரத்து 835 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல். தெரிவித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நேற்று மட்டும் 13 ஆயிரத்து 143 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் இதுவரை முகக் கவசம் அணியாதவர்கள் மீது 11 லட்சத்து 95 ஆயிரத்து 835 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல்.தெரிவித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா உச்சத்தில் இருந்து  வந்த நிலையில் அரசின் பல்வேறு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் வைரஸ் தொற்று சுமார் 37 மாவட்டங்களில் பாதியாக சரிந்துள்ளது. அதேபோல் சென்னையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவில் இருந்து குணமடைவோரின்  எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு நல்ல பலனை கொடுத்துள்ளது, நாளொன்றுக்கு சென்னையில் மட்டும் சராசரியாக 7 ஆயிரத்துக்கும் அதிகமாக நோய்த்தொற்று பதிவாகி வந்த நிலையில், தற்போது சராசரியாக நாளொன்றுக்கு நோய்த்தொற்றின் எண்ணிக்கை சென்னையில் 2700 என்ற அளவில் குறைந்துள்ளது. 

இது தமிழக அரசுக்கும், மக்களுக்கும் மிகப் பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. மேலும் ஒரு வார காலத்துக்கு ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. காரணம், ஊரடங்கை தீட்டித்தால் மட்டுமே வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்றும் இல்லை என்றால் நொய்தொற்று மீண்டும் பரவ வாய்ப்புள்ளது என்றும் சுகாதாரத்துறை வல்லுனர்கள் எச்சரித்துள்ளதே ஆகும். எனவே தமிழக காவல் துறை  ஊரடங்கை கடை பிடிப்பதில் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. ஆனாலும் சிலர் கட்டுப்பாடுகளை மீறி வெளியில் சுற்றி வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அபராதம் வசூலித்துவருகின்றனர்.

இந்தவகையில் தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நேற்று மட்டும் 13 ஆயிரத்து 143 வழக்குகள் பதியப்பட்டுள்ளது, கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் இதுவரை முகக் கவசம் அணியாதவர்கள் மீது 11 லட்சத்து 95 ஆயிரத்து 835 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல். தெரிவித்துள்ளது. அதேபோல தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது நேற்று மட்டும் 1552 வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் இதுவரை தனிமனித இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது தமிழகம் முழுவதும் 58 ஆயிரத்து 705 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது. 

 

click me!