கொரோனா சங்கிலியை உடைக்கும் மகத்தான பணி தொடரட்டும். களப்பணியாளர்களை தலையில் வைத்து கொண்டாடிய மரு. எழிலன்

By Ezhilarasan BabuFirst Published May 31, 2021, 12:02 PM IST
Highlights

தொற்று பரவலை கட்டுப்படுத்துவதும். அந்த வகையில் இறப்பை குறைக்கும் பணியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளதை போல, தொற்று சங்கிலியை உடைத்து தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பெரும்பணியில் நீங்கள் ஈடுபட்டுள்ளீர்கள்" என்று அவர்களின் பணி குறித்து குறிப்பிட்ட மருத்துவர் எழிலன் நாகநாதன் பாராட்டினார்,

சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வட்டங்களிலும், வீடு வீடாக கொரோனா ஆய்வு பணிகளில் ஈடுபடும் (sector and focus workers) சுகாதார பணியாளர்களின் வாயிற் கூட்டம் (Gate Meeting) தினசரி காலை 7:30 மணியளவில் நடைபெறுவது வழக்கம், 

ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏழு வட்டங்களிலும் நடைபெறும் வாயிற் கூட்டங்களில்  அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் கலந்து கொண்டு  அவர்களை உற்சாகப்படுத்தினார். முதற்கட்டமாக டிரஸ்புரத்தில் நடைபெற்ற 112 ஆவது வட்டத்தின் கூட்டத்திலும், கில் நகர் மைதானத்தில் நடைபெற்ற 109 ஆவது வட்டத்தின் கூட்டத்திலும் இன்று கலந்துகொண்டார்.

அப்போது, வீடு வீடாக சென்று சுகாதார களப்பணியாற்றும் அவர்களின் சேவைக்கு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார்.  "பெருந்தொற்று காலத்தில் நமது பிரதான இலக்கு இறப்பை குறைப்பதும், தொற்று பரவலை கட்டுப்படுத்துவதும். அந்த வகையில் இறப்பை குறைக்கும் பணியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளதை போல, தொற்று சங்கிலியை உடைத்து தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பெரும்பணியில் நீங்கள் ஈடுபட்டுள்ளீர்கள்" என்று அவர்களின் பணி குறித்து குறிப்பிட்ட மருத்துவர் எழிலன் நாகநாதன் பாராட்டினார், தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவுறுத்தினார். மேலும் மருத்துவம் சார்ந்த ஆலோசனைகளையும் அப்போது அவர் எடுத்துரைத்தார். 

இரண்டு கூட்டங்களிலும் மாநகராட்சி அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள் மற்றும் 120க்கும் மேற்பட்ட சுகாதார களப்பணியாளர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வை தொடர்ந்து, தூய்மை பணியாளர்களை சந்தித்து அவர்களின் பணிகளுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அவர்களின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும், அவர்களுக்கான பிரத்யேக மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார். அப்போது, சுகாதார களப்பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி, கையுறைகள் உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.


 

click me!