சதிராட்டம் காட்டும் சசிகலா... ரீ- எண்ட்ரிக்கு தயராவதால் ஜெயலலிதாவின் ஆன்மாவை வைத்து அதிமுக தலைவர்கள் ஆவேசம்..!

Published : May 31, 2021, 11:43 AM IST
சதிராட்டம் காட்டும் சசிகலா... ரீ- எண்ட்ரிக்கு தயராவதால் ஜெயலலிதாவின் ஆன்மாவை வைத்து அதிமுக தலைவர்கள் ஆவேசம்..!

சுருக்கம்

சசிகலா, அதிமுக தொண்டர்களை குழப்ப முயற்சிப்பதாக அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.  

சசிகலா, அதிமுக தொண்டர்களை குழப்ப முயற்சிப்பதாக அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு சசிகலா அமைதியாக இருந்து வந்தார். தான் அரசியலுக்கு ஒதுங்கி இருக்கப்போவதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் அதிமுக நிர்வாகி ஒருவருடன் சசிகலா போனில் பேசும் ஆடியோ ஒன்றும் வெளியானது. அதில், ஒன்றும் கவலைப்படாதீங்க, கட்சியைக் கண்டிப்பா சரி பண்ணிடலாம். கட்சி வீணாவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. கொரோனா குறைந்த பிறகு எல்லோரையும் சந்திக்கிறேன் என்று கூறினார். இது அரசியல் அரங்கில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

 

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி, “சசிகலாவின் பேச்சுக்கு ஒரு அதிமுக தொண்டர் கூட செவி சாய்க்க மாட்டார். அதிமுகவை திசை திருப்பி தொண்டர்களை குழப்ப சசிகலா முயற்சி செய்கிறார். அவரது எண்ணம் ஈடேறாது. ஒரு தொண்டரும் சசிகலாவிடம் பேசவில்லை. மாறாக சசிகலா தான் அவர்களிடம் பேசி வருகிறார். சசிகலா பேசும் நபர்கள் அமமுகவை சேர்ந்தவர்கள். ஜெயலலிதா ஆன்மா சாந்தியடையவாவது சசிகலா குடும்பம் அதிமுகவில் இருந்து விலகி இருக்க வேண்டும்’’என்று வலியுறுத்தினார்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?