தில்லு காட்டும் மாநில அரசு... மத்திய அமைச்சரை கைது செய்த போலீசார்... அதிர்ச்சியில் பாஜக அரசு..!

Published : Aug 24, 2021, 04:01 PM IST
தில்லு காட்டும் மாநில அரசு... மத்திய அமைச்சரை கைது செய்த போலீசார்... அதிர்ச்சியில் பாஜக அரசு..!

சுருக்கம்

நாடு சுதந்திரம் பெற்று எத்தனை ஆண்டுகள் ஆனது என்பது  கூட தெரியாத மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை ஓங்கி அறைய வேண்டும்" என  மத்திய அமைச்சர் நாராயண் ரானே பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையின் மத்திய அமைச்சரான நாராயன் ரானேவை மஹாராஷ்டிரா காவல்துறை கைது செய்துள்ளது.

"நாடு சுதந்திரம் பெற்று எத்தனை ஆண்டுகள் ஆனது என்பது  கூட தெரியாத மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை ஓங்கி அறைய வேண்டும்" என  மத்திய அமைச்சர் நாராயண் ரானே பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரத்தனகிரி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். நாராயண் ரானே பேசியதை பாஜக ஆதரிக்கவில்லை என முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார். சிவசேனாவின் இளைஞர் பிரிவினருக்கும் பாஜகவினருக்கு மும்பையில் உள்ள ரானேவின் குடியிருப்பு பகுதி அருகே ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர்.

 

முதல்வர் மீது மத்திய அமைச்சர் நாராயண் ரானே கூறியதை நாங்கள் ஆதரிக்கவில்லை. இந்தியா சுதந்திரம் பெற்ற ஆண்டை நினைவில் கொள்ளாததால் இந்தியராக அவர் கோபமடையலாம், இது இயற்கையானது "என்று ஃபட்னாவிஸ் கூறினார்.

நாசிக், தானே மற்றும் புனேவில் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், புனே மற்றும் மஹத்தில் ரானேவுக்கு எதிராக இரண்டு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை நாசிக் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!