Breaking news: 16வது மாநகராட்சியாக தாம்பரம் உதயமாகிறது... சட்டப்பேரவையில் அறிவிப்பு..!

By Thiraviaraj RMFirst Published Aug 24, 2021, 2:36 PM IST
Highlights

தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டமன்றத்தில் அறிவிக்கையில், ’’தாம்பரம், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி ஆகிய நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்’ என அறிவித்தார். தமிழ்நாட்டின் 16வது மாநகராட்சியாக  தாம்பரம் மாநகராட்சி உதயமாகிறது 

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர், ஈரோடு, திருப்பூர், தஞ்சாவூர், நாகர்கோவில், ஓசூர், திண்டுக்கல் மற்றும் ஆவடி என தற்போது தமிழ்நாட்டில் 15 மாநகராட்சிகள் உள்ளன. சென்னை மட்டும் பெருநகர மாநகராட்சி என்ற அந்தஸ்தில் உள்ளது.


 

click me!