வட மாவட்டங்களில் எகிறிய பாமக வாக்கு வங்கி!! வலுவான கூட்டணி போட்டு களம் காண பக்கா ஸ்கெட்ச்...

By sathish kFirst Published Jan 27, 2019, 8:59 PM IST
Highlights

திருத்தணி டூ வேதாரண்யம், பவானி டூ பாண்டிச்சேரி, பொன்னேரி டூ அரியலூர். இப்படி குறுக்கும் நெருக்குமாக வட மாவட்டங்கள் மற்றும் டெல்டாவின் சில பகுதிகள் தான் பாமகவின் ஒட்டு வங்கி எல்லைகளாகும். 

பூ.தா.இளங்கோவன், பூ.தா.அருள்மொழி, பண்ரூட்டி வேல்முருகன் ஆகியோர் ஆக்டிவாக இருந்த காலத்திலிருந்து பாமகவின் வாக்கு வங்கி சதவிகிதம் அப்படியே ஒரு மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளதாக தெரிகிறது. மக்களின் எண்ண ஓட்டம் மற்றும் அரசியல் கள நிலவரம் பற்றி  அறிந்து கொள்ள சில விஐபிக்கள் எடுத்த சர்வேயில் பா.ம.க வாக்கு வங்கி உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. 

அதில், அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தின் விழுப்புரம் திண்டிவனம், மைலம் ஆகிய பகுதிகளில் திமுகவிற்கு அடுத்த இடத்தில் அதாவது, இரண்டாவது இடத்தில இருப்பதை சர்வே கூறுகிறது. 

இதற்க்கு அடுத்து தர்மபுரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளிலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, பர்கூர், காவேரிப்பட்டினம் பகுதிகளிலும், இதேபோன்று அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் பல பகுதிகளிலும் முன்பு இருந்ததை விட வாக்கு வங்கிகள் உயர்ந்து காணப்படுகிறது.  இதே போன்று, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் கடலூர் பகுதிகளிலும் கணிசமான வளர்ச்சி கண்டுள்ளது.  

அதிகமான தொகுதிகள் அடங்கியுள்ள மிகப்பெரிய மாவட்டமான வேலூர் மாவட்டத்தில் சோளிங்கர், ஆற்காடு, அணைக்கட்டு வாணியம்பாடி கிராமப்பகுதிகள் மற்றும் ஜோலார் பேட்டை, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் புதிய கிராமக் கிளை அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளதால், இங்கும் கணிசமான கூடுதலாக வாக்குகள் பெற பிளான் போட்டுள்ளது. 4 லிருந்து 5 சதவிகிதமாக இருந்த வாக்கு வங்கி வட மாவட்டங்களில் 10 சதவீதத்தை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

சில இடங்களில், குறைந்தது 15 சதவிகிதமும் அதிகபட்சம் 18 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது (இது வட மாவட்டங்களில் குறிப்பிட்ட தொகுதிகள் மட்டும்) ஆக மொத்தத்தில் வட மாவட்டங்களை பொறுத்தவரை சராசரியாக 10 சதவிகிதத்தை தாண்டியுள்ளது தெளிவாகியுள்ளது.

தங்களது வாக்குவங்கி உயர்ந்துள்ளதை புரிந்துகொண்ட பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ஆகியோர் இந்தமுறை வலுவான கூட்டணி அமைத்து களம் காணவேண்டும் என உறுதியாக இருக்கிறார்களாம். வட மாவட்டங்கள் தவிர ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களிலும் கொங்கு லோக்கல் பிரமுகர்களின் உதவியோடு வாக்கு வங்கியை உயர்த்த பிளான் போட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
 

click me!