சன் டிவி நிருபரின் தந்தை மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!

Published : Jan 27, 2019, 06:26 PM ISTUpdated : Jan 27, 2019, 06:31 PM IST
சன் டிவி நிருபரின் தந்தை மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!

சுருக்கம்

சன் டிவி நிருபர் ஈவேராவின் தந்தை மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

சன் டிவி நிருபர் ஈவேராவின் தந்தை மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சன் தொலைக்காட்சி செய்தி பிரிவில் பல ஆண்டுகளாக நிருபராக பணியாற்றி வருபவர் ஈவேரா. இவரது தந்தை கடந்த வெள்ளிக்கிழமை மதியம் காலமானார். 

இது குறித்து திமுக நாளேடான முரசொலியில் வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியில், சன் தொலைகாட்சி செய்தி பிரிவில் நிருபராக பணியாற்றும் ஈவேராவின் தந்தை சண்முகம் என்றழைக்கப்பட்ட கலைப்பித்தன் கடந்த சில தினங்களுக்கு முன் திருவேற்காட்டில் நடந்த படப்பிடிப்பின்போது மரணமடைந்தார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். தகவல் அறிந்து துயருற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின், அன்னாரது மறைவால் துயருறும் அவரது புதல்வர் ஈவேரா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரித்துள்ளார்’ என கூறப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!