ஆசிரியர்கள் நாளை பள்ளிக்கு திரும்பாவிட்டால் வேலை காலி... சாட்டையை சுழற்றிய தமிழக அரசு..!

By Thiraviaraj RMFirst Published Jan 27, 2019, 5:54 PM IST
Highlights

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளை பணிக்கு திரும்பாவிட்டால் அவர்களின் பணியிடங்கள் காலி பணியிடங்களாக கருதப்படும் என பள்ளிக்கல்வித்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளை பணிக்கு திரும்பாவிட்டால் அவர்களின் பணியிடங்கள் காலி பணியிடங்களாக கருதப்படும் என பள்ளிக்கல்வித்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்-ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த 22ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் வழக்கமான பணிகள் முடங்கியுள்ளன.

இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்து நியமனம் செய்ய பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் பிரதீப் யாதவ் அரசாணை வெளியிட்டுள்ளார். அதன்படி தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு தொடங்கி வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்களின் நலன் கருதி போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் நாளை பள்ளிக்கு திரும்ப வேண்டும். நாளை பணிக்கு திரும்பாதவர்களின் பணியிடங்கள் காலி பணியிடங்களாக கருதப்படும்.

ஆசிரியர்கள் நாளைக்கு பணிக்கு திரும்பினால் அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படாஅது. காலிப்பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். உத்தேச காலி பணியிட பட்டியல் தயார் செய்யப்பட்டு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.  10 ஆயிரம் தொகுப்பூதியமாக தற்காலிக ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்’’ என பள்ளிக்கல்வி துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

click me!