பாமக வன்னியர் சங்க மாவட்ட செயலர்கள் கூட்டுக் கூட்டம் மே 6 ஆம் தேதி நடைபெறும் என பாமக தலைமை அறிவித்துள்ளது.
பாமக வன்னியர் சங்க மாவட்ட செயலர்கள் கூட்டுக் கூட்டம் மே 6 ஆம் தேதி நடைபெறும் என பாமக தலைமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பாமக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களின் கூட்டுக் கூட்டம் வரும் மே 6 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள கே.ஆர்.எஸ் அம்மா திருமண அரங்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: எந்த மாநிலத்தில் தான் மது விற்பனை இல்லை? - அமைச்சர் செந்தில் பாலாஜி ஆவேசம்
பாமக நிறுவனர் முன்னிலையில் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி, பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா மற்றும் இரு அமைப்புகளின் மாநில அளவிலான நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள்.
இதையும் படிங்க: இனிமே இப்படித்தான்! அதிகாரிகள் மாற்றம்! அமைச்சர்கள் மாற்றம்? அதிரடியில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின் - ஏன்?
முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கூட்டத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் அனைத்து மாவட்ட செயலர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.