எந்த மாநிலத்தில் தான் மது விற்பனை இல்லை? - அமைச்சர் செந்தில் பாலாஜி ஆவேசம்

By Velmurugan s  |  First Published May 3, 2023, 6:53 PM IST

டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு அரசாங்கத்தை நடத்த வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.


சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் மாலில் வைக்கப்பட்டுள்ள தானியங்கி மதுபான விற்பனை கடையை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “திமுக ஆட்சி அமைத்த 2 ஆண்டுகளில் 96 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், ஒட்டுமொத்த அரசாங்கமும் டாஸ்மாக் மூலமாக மட்டுமே செயல்படுவது போல் சில பத்திரிகைகள் செய்தி வெளியிடுவது வேதனை அளிக்கிறது.

மாலில் செயல்படும் மதுபான கடையை பொறுத்தவரையில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை தான் செயல்படுகிறது. டாஸ்மாக் கடையும் அந்த நேரத்தில் மட்டும் தான் இயங்கும். 21 வயதுக்கு குறைவுடைய யாராவது இதில் மது வாங்க முடிகிற அளவுக்கு உள்ளதா? இரண்டு ஊழியர்கள் கண்காணிப்பில் தான் இயங்குகிறது. இந்த கடை எங்கு உள்ளது, எப்படி செயல்படுகிறது என்று தெரிந்து செய்தி வெளியிட வேண்டும்.

Tap to resize

Latest Videos

பழனி பேருந்து நிலையம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை

29% நாடாளுமன்ற வருகை பதிவு கொண்ட நாடாளுமன்றத்திற்கே போகாதவர் இது குறித்து செய்தி வெளியிடுகிறார். எதிர்க்கட்சித் தலைவர், அன்புமணி உட்பட யாராவது நாடாளுமன்றத்தில் பேசி இந்தியா முழுவதும் பூரண மது விலக்கு கொள்கையை கொண்டு வர வேண்டியதுதானே. அதற்கு தைரியம் இல்லாமல் இங்கு வந்து அரசியல் செய்கிறார்கள். 500 கடைகள் மூடப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தான் அரசாங்கத்தை நடத்த வேண்டும் என்ற அவசியம் திமுகவிற்கு கிடையாது.

இலவச பயணத்தால் போக்குவரத்து துறைக்கு நட்டம்; பேருந்து நிறுத்தப்பட்டது குறித்து ஆட்சியர் பகீர் விளக்கம்

எந்த மாநிலத்தில் தான் மது விற்பனை நடைபெறவில்லை? அண்டை மாநிலமான கர்நாடகா உள்பட அனைத்து மாநிலங்களிலும் மது விற்கப்படுகிறது. கூடுதல் விலைக்கு மது விற்பனையில் ஈடுபட்ட 1977 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ஐந்தரை கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

click me!