டாஸ்மாக் நிறுவனத்தை ஒதுக்கிவைத்துவிட்டு ஆட்சி நடத்தியதுபோல இபிஎஸ் பேசுகிறார்.. அமைச்சர் செந்தில் பாலாஜி.!

By vinoth kumar  |  First Published May 3, 2023, 2:04 PM IST

தமிழ்நாட்டில் மட்டும் தான் அரசியலுக்காக மதுவிலக்கு வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மதுவிலக்கு கோருவோர் அகில இந்திய அளவில் கோரிக்கையை முன்வைக்காதது ஏன் என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். 


வணிகவளாகங்களில் மதுபான கடைகளை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது அதிமுக ஆட்சியில் தான் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி;- திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எந்த அறிவிப்புமின்றி 96 கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், மூடப்பட உள்ள 500 மதுபான கடைகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. டாஸ்மாக்கில் ரூ.5, ரூ.10 என கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த 1,977 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிர்வாகம் வெளிப்படைத்தன்மையுடன் நேர்மையாக நடந்து வருகிறது என்றார். 

Latest Videos

undefined

டாஸ்மாக் கடை வருமானத்தில் தமிழக அரசு நடப்பதாக கூறுவது வேதனைக்குரியது. டாஸ்மாக் வருமானத்தில் தமிழக அரசு நடக்கவில்லை. தானியங்கி இயந்திரம் மூலம் மதுபானம் வழங்கும் வசதி எந்த இடத்திலும் இல்லை. வணிகவளாகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் எலைட் மதுபான கடைக்குள் மட்டுமே எந்திரம் உள்ளது. வணிகவளாகத்தில் மதுபான தானியங்கி இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறுவது தவறானது. எலைட் மதுபான கடையில் விற்பனையாளர் முன்னிலையில் மட்டுமே மது தரும் வகையில் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வசதி ஏற்கனவே அனைத்து மாநிலங்களிலும் உள்ளது. எலைட் கடையில் உள்ள தானியங்கி மதுபான இயந்திரம் 24 மணிநேரமும் செயல்படவில்லை. ஏடிஎம் இயந்திரத்தோடு மதுபான தானியங்கி இயந்திரத்தை ஒப்பிடுவது தவறு என கூறியுள்ளார். 

வணிகவளாகங்களில் மதுபான கடைகளை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது அதிமுக ஆட்சியில் தான். தற்போது தானியங்கி மதுபான இயந்திரம் வைக்கப்பட்டுள்ள கடையானது 2019ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் மதுபான வருமானத்தை பயன்படுத்தவில்லை என எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும், பேசிய அவர் தமிழ்நாட்டில் மட்டும் தான் அரசியலுக்காக மதுவிலக்கு வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மதுவிலக்கு கோருவோர் அகில இந்திய அளவில் கோரிக்கையை முன்வைக்காதது ஏன் என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். எலைட் கடையில் மதுபான நிறுவனங்கள் தான் தானியங்கி இயந்திரங்களை நிறுவுகின்றன என தெரிவித்துள்ளார். 

click me!