ஓங்கி அடித்த ஜெயக்குமார்.. அடங்கி ஒடுங்கிய பாமக.. அதிமுக கூட்டணியிலேயே தொடர்வதாக ராமதாஸ் அந்தர் பல்டி.

By Ezhilarasan BabuFirst Published Sep 15, 2021, 4:09 PM IST
Highlights

எனவே கட்சியில் அதிகமானோருக்கு வாய்ப்பு வழங்குவதற்காகவே தனித்து போட்டி என முடிவெடுத்துள்ளோம், இந்த முடிவின் மூலம் அதிமுகவுக்கும் பாமகவுக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது என்பது போன்ற தோற்றம் உருவாகி இருக்கிறது,

கட்சியில் பெரும்பாலானோருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காகவே தனித்துப் போட்டி என்று அறிவித்துள்ளதாகவும், இதேநேரத்தில் அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது என்றும் கூட்டணியில் எந்த முரண்பாடும் இல்லை என்றும், அதிமுகவுடன் நட்புடன் பாமக இருப்பதாகவும் அக்கட்சியில் செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். எதிர்வரும் 9 மாவட்ட உள்ளாட்சி மன்ற தேர்தலில் தனித்துப் போட்டி என பாமக அறிவித்த நிலையில், அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகிவிட்டதாக செய்திகள் பரவியது. அத்துடன் அதிமுக ஓபிஎஸ்- இபிஎஸ் இன் கட்டுப்பாட்டில் இல்லாத போது அவர்களுடன் கூட்டணி வைத்து எப்படி வெற்றி பெற முடியும் என்றும், செல்வாக்கு இல்லாத  அதிமுகவுடன் போட்டியிடுவதால் பாமகவுக்கு ஒரு பலனும் இல்லை என 9 மாவட்ட பொறுப்பாளர்கள் பாமக தலைமையிடம் வலியுறுத்தியதால் தனித்துப் போட்டி என்ற முடிவை பாமக எடுத்ததாகவும் தகவல் வெளியானது. 

இந்நிலையில் அதிமுக குறித்து பாமகவின் விமர்சனத்தைப் கடுமையாக பதிலடிகொடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கூட்டணியில் தொடர்வதும் தொடராததும் அக்கட்சியின் உரிமை, அதனால் பாமக அதிமுகவை விமர்சிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பாமக அதிமுக விமர்சிக்கும் பட்சத்தில் நாங்களும் பதிலுக்கு விமர்சிக்க நேரிடும் என அவர் பகிரங்கமாக பாமகவுக்கு எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பான செய்திகளும் ஊடகங்களில் பரபரப்பாக வெளியானது. இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள பாமக  செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு, தற்போது வரை பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் தொடர்கிறது என்றும், எதிர் வரும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து நேற்று நடைபெற்ற பாமக இணையவழி கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பான்மையானோர் கட்சியினர் அனைவருக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

எனவே கட்சியில் அதிகமானோருக்கு வாய்ப்பு வழங்குவதற்காகவே தனித்து போட்டி என முடிவெடுத்துள்ளோம், இந்த முடிவின் மூலம் அதிமுகவுக்கும் பாமகவுக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது என்பது போன்ற தோற்றம் உருவாகி இருக்கிறது, அது உண்மை இல்லை என்றும், அதிமுகவுடன் பாமக நட்புடன் இருக்கிறது என்றும், அதேபோல அதிமுக மீது நேற்று நடந்த பாமக இணையவழி கூட்டத்தில் கட்சியினர் யாரும் எந்த விமர்சனத்தையும் கூறவில்லை, ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு போதிய கால அவகாசம் இல்லாததால், அதிக அளவிலான கட்சியினர் போட்டியிட வாய்ப்பளிக்கும் வகையில் இந்த முடிவு எடுத்துள்ளோம். தற்போதுவரை தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் தொடங்குகிறோம், அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் ஊடக செய்தியை அடிப்படையாக வைத்து பாமக மீது விமர்சனம் செய்துள்ளார். ஆனால் எதிர்காலத்தில் அவர் உண்மையை உணர்ந்து கொள்வார் என்றார். இதுவரை எந்த கூட்டணியில் இருந்தோமோ அதே கூட்டணியில்தான் தொடர்கிறோம் என்றார். 

அடுத்த கட்டமாக நடைபெற உள்ள நகராட்சி, மாநகராட்சி, உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி குறித்த முடிவை மருத்துவ ராமதாஸ் அறிவிப்பார், சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து மட்டுமே பாமக-அதிமுக இடையே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டி  என்ற பாமகவின் முடிவை அரசியல் ரீதியாக பெரிய முடிவாக பார்க்க முடியாது, தேர்தல் நடைபெற உள்ள ஏழு மாவட்டங்களில் பாமக பலமாக உள்ளது எனவே கட்சியினர் பலருக்கு வாய்ப்பு வழங்க முடிவு எடுக்கப்பட்டது என அவர் விளக்கமளித்துள்ளார்.

 

click me!