வங்கிக் கணக்கில் டெபாசிட்டான ரூ.5 லட்சம்... அந்த 15 லட்சத்தில் மோடி அனுப்பினாரா..? தர மறுக்கும் வாடிக்கையாளர்!

By Thiraviaraj RMFirst Published Sep 15, 2021, 3:59 PM IST
Highlights

வங்கி தவறுதலாக தனது கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.5 லட்சம் பணத்தை திருப்பி கொடுக்க மறுப்பதால் வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 

வங்கி தவறுதலாக தனது கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.5 லட்சம் பணத்தை திருப்பி கொடுக்க மறுப்பதால் வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பாஜகவை வெற்றிபெறச் செய்தால் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என 2014 மக்களவை தேர்தலின் போது வாக்குறுதி அளிக்கப்பட்டதாக தகவல் கிளம்பியது. ஆனால் யாருக்கும் அந்த பணம் வந்ததாக தெரியவில்லை. இந்நிலையில், பீகார் மாநிலம் பாட்னா கிராம வங்கி, தங்களது வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ரஞ்சித் தாஸ் என்பவரின் வங்கி கணக்குக்கு தவறுதலாக ரூ. 5.5 லட்சம் பணத்தை டெபாசிட் செய்து இருக்கிறது. 

அந்த பணத்தை ரஞ்சித் தாஸிடம் சென்று வங்கி சார்பில் நடந்த விவரத்தைக் கூறி பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியான ரஞ்சித் தாஸ், ‘’பணம் தனது வங்கிக் கணக்குக்கு வந்தவுடன் பிரதமர் மோடி வாக்குறுதியளித்த 15 லட்ச ரூபாயில் முதல் தவணைதான் தனக்குக் கிடைத்துள்ளதாக நினைத்து அதனை முழுமையாக செலவழித்துவிட்டேன். அதனை தன்னால் திருப்பித் தர இயலாது. என்னிடம் பணம் எதுவும் இல்லை’’ எனக் கூறியுள்ளார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி ஊழியர்கள், ரஞ்சித் தாஸ் மீது புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் அவரை போலீசார் கைது செய்தனர். 

click me!