வானதி சீனிவாசன் பங்கேற்ற கூட்டத்தில் பெண் மீது தாக்குதல்.. ரகளையில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகள்..!

By vinoth kumarFirst Published Sep 15, 2021, 4:03 PM IST
Highlights

பாஜக சார்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

சென்னையில் பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் கலந்து கொண்ட கூட்டத்தில் பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் விடுப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். 

இந்நிலையில், பாஜக சார்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.இந்த கூட்டத்தில் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் உரையாற்றிய வானதி சீனிவாசன் இறுதியில் விருப்ப மனுக்களை பெறும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். அப்போது, கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அங்கிருந்த  மீனாட்சி என்பவர் மீது அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியதால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, மாவட்ட தலைவர் பலராமன் அந்த பெண்ணை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார். ஆனால், மீண்டும் அந்த பெண் மண்டபத்திற்குள் நின்று கட்சி நிர்வாகிகள் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவி கலந்துகொண்ட நிகழ்வில் பெண் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!