ராகுல் காந்திக்கு ஏன் பதவி பறிக்கப்பட்டது என்பதை திருமாவளவன் நினைவில் கொள்ள வேண்டும்..! எச்சரிக்கும் பாமக

By Ajmal Khan  |  First Published Jun 12, 2023, 1:28 PM IST

அரசியல் நாகரிகத்தை சீர்குலைக்கும் செயல்களை தொடக்கத்திலேயே நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்ட பாமக வழக்கறிஞர் பாலு,  திருமாவளவன் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்து பேசி முடிவெடுக்கப்படும் என கூறினார்.
 


பாமகவை விமர்சித்த திருமாவளவன்

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் திரெளபதி அம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் வரக்கூடாது என ஒரு போராட்டம் நடைபெற்றதால் நீதிமன்ற உத்தரவுப்படி கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த பிரச்சனைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திருமாவளவன், அப்போது பாமகவை விமர்சித்து பேசியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாமக மூத்த வழக்கறிஞர் பாலு கூறும்போது, விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் தங்களது சமுதாயத்தை மிகவும் கேவலமாக இழிவுபடுத்தும் வகையில் ஒருமையில் பேசி இருப்பதாக குற்றம்சாட்டினார். 

Tap to resize

Latest Videos

திருமாவை கண்டிக்காதது ஏன்.?

பொது அரசியல் தளத்தில் தலைவர்கள் எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக  திருமாவளவன் பேச்சு இருந்ததாகவும், இந்த அரசியல் போக்குக்கு சரியானது இல்லை அவர் பேசியது மிகவும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்தார்.  மேலும் நிகழ்ச்சியில் கீ.வீரமணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டும் திருமாவளவன் பேச்சுக்கு  யாரும் எதிர் கருத்து தெரிவிக்கவில்லை. திருமாவளன் பேச்சுக்கு எதிராக தமிழக அரசு இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் தெரிவித்தார். தேர்தலை மனதில் வைத்தே மேல்பாதி விவகாரத்தை திருமாவளவன் பேசி வருவதாகவும் விமர்சித்தார். 

சட்ட ரீதியாக நடவடிக்கை

மேலும்  ஒரு தனி நபர் கருத்தை ஒரு சமுதாயதோடு இணைத்து பேசியது மிகவும் தவறு, திருமாவளவன் உண்மைக்கு புறம்பான அரசியல் நாகரிகம் சீர்குலைக்கும் கருத்தை செயல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் ஒரு சமூகத்தை இழிவுபடுத்தி பேசியதால்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் இழந்து இருப்பதாகவும் தெரிவித்தார். எனவே  திருமாவளவன் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்து பேசி முடிவெடுக்கப்படும் என வழக்கறிஞர் பாலு தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

மோடி மீது அமித்ஷவிற்கு என்ன கோபம்? எல்.முருகன், தமிழிசை பிரதமராக வாய்ப்பு... மு.க.ஸ்டாலின்
 

click me!