கடந்த ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பாக சாவல் பூண்டி சுந்தரேசன் திமுகவில் இருந்து அடிப்படை உறுப்பினர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட திருவண்ணாமலை முன்னாள் மாவட்ட துணை செயலாளர் சாவல் பூண்டி சுந்தரேசன் கார் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை திமுக தெற்கு மாவட்ட துணை செயலாளர் பதவி வகித்தவர் சாவல் பூண்டி சுந்தரேசன். இந்நிலையில், தற்போதைய தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு மற்றும் அவரது மகன் மற்றும் மாநில தடைகள சங்க துணை செயலாளராக பணியாற்றி வரும் எ.வ.வே. கம்பன் ஆகியோருக்கு எதிராக பேசிய ஆடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் கடந்த ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பாக சாவல் பூண்டி சுந்தரேசன் திமுகவில் இருந்து அடிப்படை உறுப்பினர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையும் படிங்க;- நம்பி வந்த காதலி.. நண்பருக்கு விருந்தாக்கி ரசித்த காதலன்.. வெளியான பகீர் தகவல்..!
இந்நிலையில் சாவல் பூண்டி சுந்தரேசன் திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட குன்றக்குடி அடிகளார் நகர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். வீட்டில் ஆளாளில்லாத நேரத்தில் வீட்டின் எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாருதி ஈயஸ்ட் கார் மீது மர்ம ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடினார். இதுதொடர்பாக காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ள நிலையில் அதன்படிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க;- ஒரு எம்.பி. சீட்டை கூட பாஜகவுக்கு தமிழக மக்கள் கொடுக்க மாட்டார்கள்! அமித் ஷாவுக்கு மாஸ் பதிலடி கொடுத்த TR.பாலு
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சாவல் பூண்டி சுந்தரேசன்;- நான் 50 ஆண்டு திமுகவில் இருந்ததாகவும் தற்போது திமுகவிலிருந்து தனித்து விடப்பட்டதாகவும், இதுபோன்ற நிகழ்வு முன் எப்போதும் நிகழ்ந்தது இல்லை. இந்த சம்பவம் தனக்கு வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார்.