PMK 2.0 : இனிதான் பார்க்கப்போறீங்க அன்புமணி ஆட்டத்த.. பாமக 2.0 பிளான் ரெடி.!

By Raghupati RFirst Published May 29, 2022, 1:15 PM IST
Highlights

PMK : தமிழக அரசியலில் பாட்டாளி மக்கள் கட்சியை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையிலும், ஆட்சிப் பொறுப்புக்கு  அழைத்து செல்லும் வகையிலும்  பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு பொதுக் குழு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

சென்னை திருவேற்காட்டில் நேற்று  பாமக சிறப்பு பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 25 ஆண்டுகளாக  பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக ஜி.கே மணி இருந்து வந்த நிலையில், தமிழக அரசியலில் பாட்டாளி மக்கள் கட்சியை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையிலும், ஆட்சிப் பொறுப்புக்கு  அழைத்து செல்லும் வகையிலும்  பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு பொதுக் குழு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.  

பாட்டாளி மக்கள் கட்சி 2.0 என்ற செயல்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக தலைவர் அன்புமணி, ‘பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் உள்ள மூத்த தலைவர்களை சந்தித்து வருகிறேன்,  அதன் அடிப்படையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து வாழ்த்துக்களை பெற்றேன்.எங்களுக்குள் அரசியல் எதுவும் பேசவில்லை மரியாதை நிமித்தமாக தான் சந்தித்தோம். 

பாமக 2.0

2026 சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு என்னென்ன தேவைப் படுகிறது. அதற்காகத்தான் இப்போதிலிருந்தே பாடுபடுகிறோம் 2024 தேர்தலுக்கும் அதே தான் செய்கிறோம். தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனைகள் இளைஞர்களை சார்ந்த பிரச்சனை அதிலும் குறிப்பாக அடுத்த தலைமுறையை சார்ந்த பிரச்சனைகள் அதில் முதன்மையானது மது சார்ந்த, போதை சார்ந்த பிரச்சனைகள் எனவே தமிழ்நாட்டில் பல பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் வெளியே அதிக அளவில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது,இது இன்று,நேற்று  கிடையாது. 

பல வருடங்களாக நடைபெற்று வருகிறது.அதை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார். கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகளுடன் கூட்டம் வைத்து இதற்கான முக்கிய முடிவுகளை வெளியிட வேண்டுமென கேட்டுள்ளதாக தெரிவித்தார். கொரோனா தொற்றால் ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி இருந்த காலத்தில் ஆன்லைன் சூதாட்டதில் மாணவர்கள்   விழுந்து கிடக்கின்றனர், அதனையும் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீட் தேர்வு

அடுத்த இருபது முப்பது ஆண்டுகளில் என்னென்ன இயற்கை சீற்றங்கள் வரும் என்பதற்கான திட்டமிட வேண்டும், விவசாயிகள் பிரச்சனைகளை, நீர் மேலாண்மை திட்டங்கள் முழுமையாக நிறைவேற்ற வேண்டும், சமூகநீதி பிரச்சனை பிரச்சனை அனைத்தும் அடுத்த தலைமுறை சார்ந்த பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தி எங்களுடைய பயணம் தொடரும் என்றார்.தொடர்ந்து பாமாக  நிலைப்பாடு நீட் தேர்வை எதிர்க்கின்ற நிலைமைதான், நீட் தமிழ்நாட்டிற்கு தேவை இல்லாத ஒன்று நான் மத்திய அமைச்சராக இருந்த நேரத்தில் நீட்தேர்வு கொண்டுவர திட்டமிட்டு இருந்தார்கள்.

அதைத் தடுத்து நிறுத்தியவன் நான், அதன்பிறகு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த பிஜேபி அதனை  உறுதிப்படுத்தி இருக்கின்றனர்,  தமிழகத்தில் இரண்டு முறை அதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆளுநரும் உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றார். நீட் தேர்வால் அதிக பாதிப்பு தமிழகத்திற்கு தான் இருக்கிறது.அதனால் சிறப்பு கவனமாக எடுத்து, இந்த கூட்டு முயற்சிக்கு பாமகவும்  துணை நிற்கும்’ என்று பேசினார்.

இதையும் படிங்க : ராமதாஸ், அன்புமணி செஞ்ச துரோகம்..வன்னிய சமூகம் சும்மா விடாது - காடுவெட்டி குரு மகள் ஆவேசம் !

இதையும் படிங்க : அடங்காத ஆளுங்கட்சி.. சாட்டையை எடுத்த எடப்பாடி பழனிசாமி.. போராட்டத்தில் குதிக்கும் அதிமுக !

click me!