அழுத்தம் கொடுக்கும் பாமக... தேர்தல் அறிவிப்புக்குள் அதை நடத்திக் காட்ட ராமதாஸ் திட்டவட்டம்..!

Published : Jan 08, 2021, 12:25 PM IST
அழுத்தம் கொடுக்கும் பாமக... தேர்தல் அறிவிப்புக்குள் அதை நடத்திக் காட்ட ராமதாஸ் திட்டவட்டம்..!

சுருக்கம்

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒடுக்கீடு போராட்டத்தை தீவிரப்படுத்த பா.ம.க. முடிவு செய்துள்ளது.

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒடுக்கீடு போராட்டத்தை தீவிரப்படுத்த பா.ம.க. முடிவு செய்துள்ளது.வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு பா.ம.க. தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. நேற்று மாநகராட்சி, நகராட்சி, கோட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு பெருந்திரளாக போராட்டம் நடத்தி மனு கொடுத்தார்கள். இட ஒடுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசு தரப்பில் எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை. எனவே போராட்டத்தை தீவிரப்படுத்த பா.ம.க. முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக நாளை கட்சியின் உயர்மட்ட குழுவினருடன் காணொலி மூலம் டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் இடஒதுக்கீடு தொடர்பாக பா.ம.க.வின் அடுத்த கட்ட செயல்பாடு பற்றி முடிவு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மாவட்ட அளவிளான நிர்வாகிகள் கூட்டம் நடத்தி ஆலோசனை கேட்கப்பட்டது. தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு இடஒதுக்கீடு பிரச்சினையில் தீர்வு காணவேண்டும் என்பதில் பா.ம.க. உறுதியாக இருப்பதாகவும் எனவே அடுத்தகட்ட போராட்டங்கள் இதைவிட தீவிரமாகவும் இருக்கும் என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்.
 

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!