விக்கிரவாண்டி: சுயேட்சையாகப் போட்டியிடும் பாமக நிர்வாகி... அதிமுக - பாமக கூட்டணியில் அதிர்ச்சி!

By Asianet TamilFirst Published Sep 26, 2019, 6:50 AM IST
Highlights

விக்கிரவாண்டி தொகுதியில் 2016-ல் நடைபெற்ற தேர்தலில் 40 ஆயிரம் வாக்குகளை பாமக பெற்றது. திமுக இத்தொகுதியில் 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் அதிமுகவை தோற்கடித்தது. பாமக கூட்டணியில் இருப்பதால் அதிமுகவுக்கு சுலபமாக வெற்றி கிடைக்கும் என்று ஆளுங்கட்சி கருதுகிறது. 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவைச் சேர்ந்தவர் நிர்வாகி சுயேட்சையாக மனுதாக்கல் செய்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
 நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த  தேர்தலில் அதிமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் எம். முத்தமிழ்ச்செல்வனும், நாங்குநேரி தொகுதியில்  ரெட்டியார்பட்டி வெ. நாராயணனும் போட்டியிடுவார்கள் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் பாமக முன்னாள் அமைப்புச் செயலாளர் ராஜா சுயேட்சையாக மனுதாக்கல் செய்துள்ளார். இது அத்தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறுள்ளது. இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவும் வழங்கியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் பாமகவைச் சேர்ந்தவர் மனுதாக்கல் செய்திருக்கிறார்.
விக்கிரவாண்டி தொகுதியில் 2016-ல் நடைபெற்ற தேர்தலில் 40 ஆயிரம் வாக்குகளை பாமக பெற்றது. திமுக இத்தொகுதியில் 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் அதிமுகவை தோற்கடித்தது. பாமக கூட்டணியில் இருப்பதால் அதிமுகவுக்கு சுலபமாக வெற்றி கிடைக்கும் என்று ஆளுங்கட்சி கருதுகிறது. இந்நிலையில் அக்கட்சியைச் சேர்ந்தவர் சுயேட்சையாக வேட்புமனுதாக்கல் செய்திருப்பது அதிமுக - பாமக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!