விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்... விஜயகாந்த் ஆதரவு கேட்டு வீடு தேடி சென்ற அதிமுக அமைச்சர்கள்!.

By Asianet TamilFirst Published Sep 25, 2019, 9:44 PM IST
Highlights

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டு தேமுதிக தலைமை பொதுச்செயலாளர் விஜயகாந்தைச் சந்திக்க அதிமுக தரப்பில் முடிவானது. இதன்படி இன்று இரவு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி , திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
 

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் முறைப்படி ஆதரவு கேட்டு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை அதிமுக அமைச்சர்கள் சந்தித்து பேசியுள்ளனர்.
 நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். வட மாவட்டத்தில் வலுவான கட்சிகளான பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணியில் இருப்பதால், சுலபமாக வெற்றி பெற முடியும் என்று அதிமுக கருதுகிறது. 
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து ஆதரவு தருவதை தேமுதிக தலைமை பயன்படுத்திக்கொண்டதாகத் தகவல் வெளியானது. இதனால், இடைத்தேர்தலில் தேமுதிக ஆதரவு அதிமுகவுக்குக் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில்  நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டு தேமுதிக தலைமை பொதுச்செயலாளர் விஜயகாந்தைச் சந்திக்க அதிமுக தரப்பில் முடிவானது. இதன்படி இன்று இரவு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி , திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
அப்போது இடைத்தேர்தலில் தேமுதிகவின் ஆதர்வை கேட்டு அமைச்சர்கள் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. 

click me!