"வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம்.." 'வடிவேலு' ஸ்டைலில் அட்வைஸ் கொடுத்த ராமதாஸ் !!

By Raghupati RFirst Published Feb 28, 2022, 1:04 PM IST
Highlights

‘கிராமம் கிராமமாக செல்லுங்கள், திண்ணை பிரசாரங்கள் மூலம் மக்களிடம் பேசுங்கள். இன்னும் 2 ஆண்டுகளில் வரப்போகும் பாராளுமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராகுங்கள்’ என்று பாமக நிர்வாகிகளுக்கு அறிவுரை கொடுத்து இருக்கிறார் ராமதாஸ்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட பாமக செயலாளர்களுடன் தைலாபுரத்தில் நேற்று பாமக நிறுவனர். டாக்டர் ராமதாஸ் ஆலோசனை  நடத்தினார். அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாமக வேட்பாளர்கள் வெற்றி பெறாததற்கான காரணங்கள் பற்றி கட்சி நிர்வாகிகளிடையே ஆலோசனை நடத்தினார்.

பிறகு  நிர்வாகிகளிடம் பேசிய அவர்,  ‘தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜமானதுதான். பெரிய பெரிய கட்சிகள் கூட தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளன. எனவே தோல்வி, பணம் கொடுப்பது பற்றி யோசிக்காதீர்கள். நமது வேலையை நாம் தொடர்ந்து தொய்வில்லாமல் செய்ய வேண்டும்.

 கிராமம் கிராமமாக செல்லுங்கள், திண்ணை பிரசாரங்கள் மூலம் மக்களிடம் பேசுங்கள். இன்னும் 2 ஆண்டுகளில் வரப்போகும் பாராளுமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராகுங்கள். தமிழகத்தின் தென் கோடியில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலும் நமது வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

மேற்கு மாவட்டமான ஈரோட்டிலும் வெற்றி பெற்று இருக்கிறார்கள். எனவே எந்த ஊரிலும் பா.ம.க. கிளை இல்லை என்ற நிலை இருக்கக் கூடாது. அனைத்து வாக்கு சாவடிகளிலும் பாமக ஏஜெண்ட் இருக்க வேண்டும். நமது உழைப்பின் மூலம் மக்கள் செல்வாக்கை பெற முடியும் என்று கூறினார்.

click me!