பாமகவுக்கு சவுக்கடி உறுதி... மு.க. ஸ்டாலின் அதிரடி வியூகம்!

By Asianet TamilFirst Published Feb 22, 2019, 11:16 AM IST
Highlights

நாடாளுமன்றத் தேர்தலில் வட மாவட்டங்களில் அதிமுக - பாமக கூட்டணியை முறியடிக்க திமுகவே நேரடியாக களத்தில் இறங்க வேண்டும் என்று அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளனர். கூட்டணி கட்சிகள் போட்டியிட்டால், போட்டியைக் கடுமையாக்கிவிடுவார்கள் என்றும் திமுகவில் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் பாமக போட்டியிடும் பெரும்பாலான தொகுதிகளில் திமுக போட்டியிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்து போட்டியிடுகிறது. கூட்டணிக்காக திமுக, அதிமுக என இரு தரப்பிலும் பாமக பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கடைசியில் 7+1 என்ற தொகுதி உடன்பாட்டை அதிமுகவுடன் முடித்துக்கொண்டது, இந்தக் கூட்டணியை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருகிறார். 

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வட மாவட்டங்களில் திமுக கணிசமாக வெற்றி பெற்றது. அதற்கு பாமக தனித்து போட்டியிட்டு பிரித்த வாக்குகளும் ஒரு காரணம். பாமகவின் வாக்குப் பிரிப்பு பெரும்பாலான தொகுதிகளில் திமுகவுக்கு சாதகமானது. ஆனால், தற்போது பாமகவும் அதிமுகவும் கூட்டணி அமைத்திருப்பதால் இந்த முறை தேர்தலில் திமுகவுக்கு கடும் பலப்பரீட்சையை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினகரன் வாக்கு பிரிப்பு திமுகவுக்கு சாதகமாக இருந்தாலும், ஆளுங்கட்சி செல்வாக்கு, அதிகாரப் பலம், பணப் பலம் போன்றவற்றையும் திமுக கூட்டணி எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நாடாளுமன்றத் தேர்தலில் வட மாவட்டங்களில் அதிமுக - பாமக கூட்டணியை முறியடிக்க திமுகவே நேரடியாக களத்தில் இறங்க வேண்டும் என்று அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளனர். கூட்டணி கட்சிகள் போட்டியிட்டால், போட்டியைக் கடுமையாக்கிவிடுவார்கள் என்றும் திமுகவில் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

 

கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக தருமபுரி, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சிதம்பரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த ஆறு தொகுதிகளில் சிதம்பரம் தவிர்த்து மற்ற தொகுதிகளில் ஒன்றைக்கூட காங்கிரஸுக்கு ஒதுக்காமல் திமுகவே வைத்துக்கொண்டது. எல்லா தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெற்றது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மட்டுமே பாமக கடும் போட்டியை திமுகவுக்கு கொடுத்திருந்தது.  

அதே பாணியில் இந்த முறையும் பாமக போட்டியிடும் பெரும்பாலான தொகுதிகளில் திமுக போட்டியிடும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலையில் பாமக அதிமுகவிடம் கேட்க உத்தேசித்துள்ள தொகுதிகளில் சிதம்பரம், ஆரணி தொகுதியை மட்டும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்கும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆக, பாமகவுடன் முழுமையாக மோத திமுக முடிவு செய்துவிட்டது.

click me!