மவுசே இல்லாத காங்கிரஸ்... மொத்தமாக சரிந்த ராகுலின் செல்வாக்கு!! அல்லு தெறிக்க விட்ட ஆன்லைன் கருத்துக்கணிப்பு!!

By sathish kFirst Published Feb 22, 2019, 10:44 AM IST
Highlights

"டைம்ஸ்" குழுமத்திலுள்ள 13 ஊடக நிறுவனங்கள் ஆன்லைனில் நடத்தியுள்ள கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் என சொல்லப்படுகிறது.

நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு என வேகமாக நகர்ந்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது, மோடிக்கு மக்கள் மத்தியில் எந்த அளவிற்கு ஆதரவு உள்ளது, ராகுல் காந்தியின் செல்வாக்கு இப்போது கூடியுள்ளதா, தேர்தலில் எந்தெந்தப் பிரச்சினைகள் எதிரொலிக்கும் என்பது போன்ற பல கேள்விகளை மையப்படுத்தி டைம்ஸ் நிறுவனம் ஆன்லைனில் கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.

இந்தக் கருத்துக்கணிப்பின்படி மோடி மீண்டும் பிரதமராகவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக டைம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் 83 சதவிகிதம் பேர் மோடி தலைமையிலான அரசு மீண்டும் அமைய ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு அமைய 9.25 சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவு அளித்துள்ளனர். இதன்மூலம் காங்கிரசில் மவுசு குறைந்தும், ராகுலின் செல்வாக்கு சரிந்து காணப்படுகிறது.

இந்த கருத்துக்கணிப்பில் கேட்கப்பட்ட மற்ற கேள்விகளையும், அதற்குக் கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்கள் அளித்த பதிலையும் பார்க்கலாம்.

பொதுத் தேர்தல் இன்று நடந்தால் உங்களுடைய பிரதமராக யாரை  தேர்வு செய்வீர்கள்?

நரேந்திர மோடி - 83.89%

ராகுல் காந்தி- 8.33%

மம்தா பானர்ஜி - 1.44%

மாயாவதி - 0.43%

மற்றவர்கள் - 5.92%

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் செல்வாக்கு 2014ஆம் ஆண்டை விட தற்போது கூடியுள்ளதா?

ஆம் - 31.15%

இல்லை - 63.03%

பதில் இல்லை - 5.82%

கடந்த பிப்ரவரி 11 முதல் 20 வரையில் ஒன்பது மொழிகளில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், ஒட்டுமொத்தமாக 5 லட்சம் வாக்குகள் வரையில் இந்தக் கருத்துக்கணிப்பில் பதிவாகியுள்ளது. ஆனால், ஒரு நபருக்கு ஒரு வாக்கு மட்டும் எடுத்துக்கொள்ளப்பட்டு 2 லட்சம் பேரின் வாக்குப் பதிவுகளின் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக  டைம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

click me!