அமைச்சர் வீரமணி ஐடி ரெய்டு பின்னணி என்ன தெரியுமா ? அடுத்த டார்கெட் சி.வி.சண்முகம் !!

By Selvanayagam PFirst Published Feb 22, 2019, 10:24 AM IST
Highlights

பாஜக மற்றும் பாமகவுடன் கூட்டணி வேண்டாம் என தொடர்ந்து கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வந்ததால்தான் அமைச்சர் வீரமணி தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடந்ததாக அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதன் பின்னணியில் இபிஎஸ்  இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அமைச்சர் சி.வி.சண்முகம் தான் அடுத்த டார்கெட் எனவும் கூறப்படுகிறது.

பாஜகவுடன் கூட்டணி என எடப்பாடி குரூப் பேசத் தொடங்கிய உடனேயே அதற்கு முழு அளவில் எதிர்ப்புத் தெரிவித்தவர் அமைச்சர் சண்முகம்தான். பாஜகவுடன் கூட்டணி வைத்தால் மோசமாக தோற்று விடுவோட் என்று எல்லோரிடமும் அமைச்சர் சண்முகம் புலம்பியிருக்கிறார்.

அதே நேரத்தில் எடப்பாடி தரப்பினர் சண்முகத்துக்கு அடுத்த ஷாக் ஒன்றையும் கொடுத்தனர். இது தான் பாமகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை. இதற்கும் சண்முகம் எதிர்ப்புத் தெரிவித்தும் அவரது சொல் அம்பலத்தில் ஏறவில்லை

விழுப்புரத்தைச் சேர்ந்த தமிழக அமைச்சர் சி.வி.சண்முகத்தை, திண்டிவனத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கடந்த 2006 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதி ஆயுதங்களுடன் வந்த கும்பல் ஒன்று கொல்ல முயன்றது. இந்த மோதலில் சி.வி.சண்முகத்தின் உறவினர் முருகானந்தம் என்பவர் கொல்லப்பட்டார். 


இது தொடர்பான வழக்கு தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்தப் பிரச்சனை தொடங்கியதில் இருந்தே சண்முகத்துக்கும் – பாமகவுக்கும் ஏழாம் பொருத்தம்தான். ஆனால் பாமகவுடன் கூட்டணி என சொல்லப்பட்வுடனேயே சண்முகம் அப்செட் ஆனார்.

இதே போல் வேலூர் மாவட்டம் இடையாம்பட்டியில் உள்ள அமைச்சர் வீரமணி வீடு, ஜோலார்பேட்டையில் உள்ள அரசியல்  பி.ஏ, சீனிவாசன் வீடு, போன்ற 9 இடங்களில் நேற்று திடீரென ஐடி ரெய்டு நடந்தன. இதற்கு முழுக்க, முழுக்க காரணம் முதலமைச்சர் தான் என்று வீரமணி ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கான தேர்தல் செலவுகளை வீரமணியிடம் செய்யச் சொல்லியுள்ளார் எடப்பாடி. ஆனால் தன்னிடம் ஒருபைசாகூட  இல்லை என கைவிரித்த வீரமணி, எனது தம்பிக்கு சீட் கொடுங்க அவர் போட்டியிடும் தொகுதிக்கு மட்டும் செலவு செய்கிறேன் என்று மோதல் போக்கில் பேசியுள்ளார்.

மேலும் அமைச்சர் சண்முகத்துடன் சேர்ந்து கொண்டு பாஜக மற்றும் பாமக கூட்டணியை மிகவும் வெளிப்படையாகவே விமர்சனம் செய்துள்ளார். இப்படி அடுக்கடுக்கான பல காரணங்கள் தான் இந்த ஐடி ரெய்டு நடைபெற்றதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதே நேரத்தில் சி.வி.சண்முகமும்  தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடித்தால், அடுத்த ரெண்டு அவர் வீட்டில் தான் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்

click me!