ஆளுங்கட்சியை மிரட்டும் பா.ம.க! 80 தொகுதிகள் கொடுக்கலேன்னா எஸ்கேப் உறுதி: இ.பி.எஸ்.ஸை கடுப்பாக்கும் உளவுத்துறை ரிப்போர்ட்..!

By Vishnu PriyaFirst Published Jan 26, 2020, 4:58 PM IST
Highlights

’2021ல் பா.ம.க. ஆட்சி அமையும்!’ என்று அன்புமணி சொல்லியிருப்பதெல்லாம் கூட்டணி பிளவுக்கான அச்சாரங்கள்தான்! என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அ.தி.மு.க.விலிருந்து விலகும் பா.ம.க. நிச்சயம் தி.மு.க. கூட்டணிக்குதான் வரப்போகிறது. அதேபோல் தி.மு.க. தன் கூட்டணியிலிருந்து காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகளை வெளியேற்றிட போகிறது! என்று தகவல்கள் தடதடக்கின்றன. 

டாக்டர் ராமதாஸ் தனது இத்தனை ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் அந்தளவுக்கு மனம் வருந்தியிருக்க மாட்டார். ஆனால் அது நிகழ்ந்தது  எப்போதென்றால்....அ.தி.மு.க.வின் கூட்டணியில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது பா.ம.க. இணைந்ததை வைத்து ஸ்டாலின் திட்டிய திட்டுக்களின் போதுதான். 
அரசியலில் கூட்டணி உருவாவதும் உடைவதும் இயல்பு! எனும் தத்துவத்தை எல்லாம் தூக்கி குப்பையில் போட்டுவிட்டு, ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இருவரையும் நோக்கி ஸ்டாலின் வைத்த விமர்சனத்தை பா.ம.க. தன் வரலாற்றில் மறக்கவே முடியாது. அதேபோல் புதிய கூட்டணி குறித்து பிரஸ்மீட்டில் அமர்ந்த அன்புமணியை, செய்தியாளர்கள் வெச்சு வகுந்தெடுத்து கேள்வி கேட்ட சம்பவமும் எந்த சுழலிலும் அக்கட்சியால் மறக்க முடியாத துயரம். 


இவ்வளவு அவஸ்தைகளை அனுபவித்ததன் மூலம் பா.ம.க.வுக்கு கிடைத்த ரிசல்ச்ட் என்ன? என்றால்....நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த அத்தனை தொகுதிகளிலும் தோல்வி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வை ஜெயிக்க வைத்தது, உள்ளாட்சி தேர்தலில் ஏதோ சில வெற்றிகள்  மற்றும் அன்புமணி ராமதாஸுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி! ஆகியனதான்.  இவ்வளவுக்கும் பிறகும் அ.தி.மு.க.வை தாங்கிக் கொண்டா இருக்கும் பா.ம.க. இதோ அக்கூட்டணியிலிருந்து வெளியேறிவிட அக்கட்சி முடிவெடுத்துவிட்டது! என்று தொடர்ந்து தகவல்கள் கசிகின்றன. இதை மெய்ப்பிப்பது போலவே அன்புமணியின்  வெளிப்படை பேச்சுக்களும் அமைந்துள்ளன. ’2021ல் பா.ம.க. ஆட்சி அமையும்!’ என்று அன்புமணி சொல்லியிருப்பதெல்லாம் கூட்டணி பிளவுக்கான அச்சாரங்கள்தான்! என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.  அ.தி.மு.க.விலிருந்து விலகும் பா.ம.க. நிச்சயம் தி.மு.க. கூட்டணிக்குதான் வரப்போகிறது. அதேபோல் தி.மு.க. தன் கூட்டணியிலிருந்து காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகளை வெளியேற்றிட போகிறது! என்று தகவல்கள் தடதடக்கின்றன. 


பா.ம.க.வின் மூவ்களை புரிந்து கொண்ட அ.தி.மு.க.வின் அமைச்சர்கள் வெளியில் சும்மா ராமதாஸ் டீமை அலட்சியப்படுத்தி பேசினாலும் கூட, உள்ளுக்குள்  அலறிக் கிடக்கின்றனர். காரணம், தமிழகத்தில் மொத்தமிருக்கின்ற 234 தொகுதிகளில் சுமார் 126 தொகுதிகளில் பா.ம.க.வுக்கு உறுப்பினர்கள் இருக்கிறார்கள்! என்று தகவல். குறைந்தது எண்பது தொகுதிகளிலாவது அக்கட்சிக்கு செல்வாக்கு இருப்பது உண்மை! வன்னியர்கள் சமுதாய வாக்குவங்கிதான் பா.ம.க.வின் ஆணிவேரே. அம்மக்களில் பெரும்பான்மையோர் யாரை ஆதரிக்கிறார்களோ அக்கட்சிதான் இந்த தொகுதிகளில் வெற்றியடைய முடியும். எனவேதான் பா.ம.க.வை இழக்க அ.தி.மு.க. அச்சப்படுகிறது. 
ஆளுங்கட்சியின் இந்த நடுக்கம் பா.ம.க.வுக்கும் நன்கு தெரியும். அதனால்தான் சுமார் பதினான்கு மாவட்டங்களில் தங்களுக்கு அதிகபட்சம் எண்பது தொகுதிகள், குறைந்தது அறுபது தொகுதிகளாவது நிச்சயம் வேண்டும்! என்று ஒற்றைக் காலில் நிற்கின்றனர்.

பா.ம.க. தங்களுக்கு தொகுதிகள் தந்தே ஆக வேண்டும் என குறிவைத்திருக்கும் மாவட்டங்களாக உளவுத்துறை சொல்பவை......”விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட பதினான்கு, பதினைந்து மாவட்டங்கள்” என்று தகவல்கள் தடதடக்கின்றன. இம்மாவட்டங்களில் கணிசமான தொகுதிகளை கொடுத்து மருத்துவர்கள் இருவரையும் கன்வின்ஸ் செய்யாவிட்டால் பா.ம.க. பறப்பது உறுதி! என்றே ஆட்சி தலைமைக்கு  ஓலை போயிருக்கிறதாம். 
அப்ப பஞ்சாயத்து இருக்கு!

click me!