கமல்ஹாசனுக்கு அரசியல் ஆர்வம் விட்டுப்போச்சு! காந்தி, பெரியார், பகுத்தறிவையும் தள்ளி வைக்கிறார்..! உலக நாயகனை உலுக்கும் ஆதாரங்கள்..!

By Vishnu PriyaFirst Published Jan 26, 2020, 4:51 PM IST
Highlights

கமலுக்கு அரசியல் ஆர்வம் குறைந்துவிட்டது. இதை புரிந்து கொண்ட அவரது கட்சி நிர்வாகிகள் ‘அப்படியானால் எங்கள் நிலை? மூன்றே வருடத்தில் கலைக்கப்பட்ட ஒரே கட்சி நம்முடையதாகதான் இருக்கும்.’ என்று பொருமினர். இதையடுத்தே ‘கட்சியை கலைக்கப்போறேன்னெல்லாம் நான் சொல்லலை. கொஞ்சம் ரெஸ்ட் தேவைப்பட்டது அதான் சைலன்டாக இருக்கிறேன். குடும்பமும் அவசியம்தானே!’ என்று கன்வின்ஸ் செய்திருக்கிறார். இதன் பிறகே நிர்வாகிகளை ஆறுதல்படுத்த பிப்ரவரியில் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் துவங்குகிறார். 

’இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் நியாயமாக நடைபெறாது. எனவே மக்கள் நீதி மய்யம் இதில் போட்டியிடவில்லை!’ என்று சொல்லி உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்தார் கமல்ஹாசன். ஆனால் தேர்தல் சுமூகமாக நடந்தது,  இருபது வயது இளம் பெண்கள் முதல் தொண்ணூறு வயது பாட்டிகள் வரை பலர் மிக ஜனநாயகமாகவும், திறமையாகவும் இந்த  தேர்தலில் வென்று மக்கள் பிரதிநிதியானார்கள். ஆளுங்கட்சியின் பெரிய எதிரியாக பார்க்கப்படும் அ.ம.மு.க.வும், நடப்பு அரசியலை வன்மையாக எதிர்ப்பும் நாம் தமிழர் கட்சிகளும் தங்கள் சார்பாக பல வெற்றியாளர்களைப் பெற்றனர். இதையெல்லாம் பார்த்துவிட்டு ”நாம் இந்த தேர்தலை புறக்கணித்தது மிகப்பெரிய தவறு. எதற்கெடுத்தாலும் காந்தியை மேற்கோள்காட்டும் நீங்கள், அவர் சொன்ன ‘கிராம பதவி’க்கான தேர்தலை கண்டு பயந்தது போலாகிவிட்டது.” என்று ம.நீ.ம.வின் நிர்வாகிகள் கமலிடம் கொதித்தனர். 
ஆனால் கமல் இதற்கெல்லாம் அலட்டிக் கொள்ளவேயில்லை. காரணம், கமலுக்கு அரசியல் மீதான பிடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கிவிட்டது! என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இது தொடர்பாக  அவர்கள் சுட்டிக் காட்டும் ஹைலைட் பாயிண்டுகள். 


*    நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெல்லாதது கமலுக்கு மிகப்பெரிய ஏமாற்றம். தனது அகில இந்திய இமேஜுக்கு  கிடைத்த அடியாகவே இதை கருதினார். உள்ளூர அரசியலை வெறுக்க துவங்கினார். 
*    உள்ளாட்சி தேர்தலை அவர் புறக்கணித்ததை, துவக்கத்திலேயே அக்கட்சி நிர்வாகிகள் எதிர்த்தனர். ஆனால் கமல் ரியாக்ட் பண்ணவுமில்லை, தன் செயலை நியாயப்படுத்தவுமில்லை, விளக்கம் தரவுமில்லை. இந்த ‘சைலன்ஸ்’ போக்கானது அவரது அரசியல் வெறுப்பை படம் போட்டுக் காட்டியது. 

*    கமலையும் மீறி அக்கட்சியிலிருந்து சிலர் சுயேட்சையாக போட்டியிட்டனர் தேர்தலில். இவர்களை கமல் கட்சியிலிருந்து நீக்கினார். ஆனால் இந்த தகவல்கள் பேப்பர்களில் வராமல் பார்த்துக் கொண்டார். ‘இணைப்பு, நிக்குதல்’ நடவடிக்கைகள் எல்லா கட்சியிலும் வழக்கம். ஆனால் இதை மறைப்பதன் மூலம், தன் இமேஜ் மீது பெரிய சேதாரமின்றி அமைதியாய் ஒதுங்கிட கமல் நினைப்பது புரிகிறது. 

*    இதையெல்லாம் தாண்டி, காலில் நடத்தப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பின் அவரது அரசியல் ஆர்வம் வெகுவாய் குறைந்துவிட்டது. அதேவேளையில் குடும்ப பாசம் அதிகமாகிவிட்டது. 
*    டிஸ்சார்ஜ் ஆகி வந்த கமலை அவரது அண்ணி ஆரத்தி எடுத்து வரவேற்றதை, பகுத்தறிவாளி கமல் தடுக்கவில்லை. மாறாக ஆரத்திக்கும் போஸ் கொடுத்து, அந்த நிகழ்வை போட்டோ எடுத்தவருக்கும் போஸ் கொடுத்தார். 


*    சுமூக உறவு இல்லாத தன் அண்ணன் சாருஹாசனின் பிறந்த நாள் விழாவில் தன் மகளுடன் கலந்து கொண்டு, அதில் பாட்டெல்லாம் பாடி  குடும்பத்துடன் கலந்தார். வயதாகிவிட்ட கமலுக்கு நாத்திகம், பகுத்தறிவு, பொதுவாழ்வு, ரசிகர்கள், கட்சி, நிர்வாகிகள் இவற்றையெல்லாம் தாண்டி குடும்ப உறவின் மேன்மை புரிய துவங்கியுள்ளது. 
*    மீண்டும் சினிமாவில் சம்பாதிக்க நினைக்கிறார் கமல். அதனால்தான் படங்களை தயாரிப்பது மட்டுமில்லாமல், தமிழில் டப் செய்யப்படும் இந்தி படத்தை வெளியிடுமளவுக்கு இறங்கிவிட்டார்!
-     எனவே கமலுக்கு அரசியல் ஆர்வம் குறைந்துவிட்டது. 
இதை புரிந்து கொண்ட அவரது கட்சி நிர்வாகிகள் ‘அப்படியானால் எங்கள் நிலை? மூன்றே வருடத்தில் கலைக்கப்பட்ட ஒரே கட்சி நம்முடையதாகதான் இருக்கும்.’ என்று பொருமினர். இதையடுத்தே ‘கட்சியை கலைக்கப்போறேன்னெல்லாம் நான் சொல்லலை. கொஞ்சம் ரெஸ்ட் தேவைப்பட்டது அதான் சைலன்டாக இருக்கிறேன். குடும்பமும் அவசியம்தானே!’ என்று கன்வின்ஸ் செய்திருக்கிறார். இதன் பிறகே நிர்வாகிகளை ஆறுதல்படுத்த பிப்ரவரியில் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் துவங்குகிறார். 
தேர்தலுக்கு கணிசமான நாட்கள் இருக்கும் நிலையில் கமல் இப்போது ஏதோ பிரசாரம் போல் சுற்றுப்பயணம் செய்வதால் எந்த நன்மையுமில்லை. இது கமலுக்கு தெரிந்தும் கூட அவர் அதை செய்கிறார் என்றாலே தெரியவில்லையா, அவர் ஒப்புக்கு அரசியல் செய்கிறார் என்று!?” என்கிறார்கள். 
ஓஹோ!

click me!