அன்புமணியின் டெபாசிட் காலி பண்ண பிளான்... சிதறும் வன்னியர் வாக்குகளால் விழிபிதுங்கி நிற்கும் பாமக!!

By sathish kFirst Published Feb 24, 2019, 10:37 AM IST
Highlights

ஒரு பக்கம், எப்படியும் அன்புமணியை தோற்கடித்தே தீரவேண்டும் என பிளான் போடும் குரு குடும்பம், மற்றொரு பக்கம் திமுக கூட்டணி, வன்னியர்கள்கள் வாக்குகளை மட்டுமே நம்பி நிற்கும் அன்புமணிக்கு எதிராக திமுக கூட்டணியில் வன்னியர் அல்லாத யார் நின்னாலும் டெபாசிட்டை காலி செய்து விடலாம் என்பதே திமுகவின் கணக்காம்.

அதிமுக பிஜேபி கூட்டணியில், ராமதாஸின் மகன் அன்புமணி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து காடுவெட்டி குருவின் தாயார் போட்டியிடுவார், ராமதாசுக்கு எதிராக வன்னியர் 50 % வாக்குகள் சிதறும் என்பதால் ராமதாஸ் ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். 

“ஓட்டுமொத்த வன்னியர்களின் பிரதிநிதியாகத் தங்களைக் காட்டிக்கொண்டு, வன்னியர் சமூகத்தை ராமதாஸும் அன்புமணியும் அடிமைப்படுத்த நினைக்கிறார்கள். காடுவெட்டி குரு மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுத்த அதிமுகவுடனேயே தற்போது கூட்டணி அமைத்துள்ளார்கள். இதன் மூலம், ஒட்டுமொத்த வன்னியர் சமூகத்தினரையும் ராமதாஸ் இழிவுபடுத்திவிட்டார் என பாமகவிலிருந்து நீக்கப்பட்ட விஜிகே மணிகண்டன் வன்னியர்கள் உசுப்பேற்றியுள்ளார்.

காடுவெட்டி குருவின் மரணத்துக்கு பிறகு, குருவின் மரணத்துக்கு காரணமே ராமதாஸ் குடும்பத்தினர் தான் என பாமகவுக்கு எதிராக திரும்பி இருக்கிறார்கள் குருவின் குடும்பத்தினர். தொடர்ந்து பாமகவையும்  ராமதாசையும் விமர்சித்து வருகிறார்கள். தற்போது, அன்புமணி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், அங்கே காடுவெட்டி குருவின் தாயார் கல்யாணி அம்மாள் போட்டியிடுவார் என காடுவெட்டி குரு குடும்பத்தினர் கூறி உள்ளனர். 

 'ஒட்டுமொத்த வன்னியர்களின் பிரதிநிதியாக தங்களை காட்டிக்கொண்டு, வன்னியர் சமூகத்தை ராமதாசும் அன்புமணியும் அடிமைப்படுத்த நினைக்கிறார்கள். காடுவெட்டி குரு மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுத்த அ.தி.மு.க.வுடனேயே தற்போது கூட்டணி அமைத்துள்ளார்கள். இதன்மூலம், ஒட்டுமொத்த வன்னியர் சமூகத்தினரையும் ராமதாஸ் இழிவுபடுத்திவிட்டார்.    இனியும் ராமதாசையும், அன்புமணியையும் வன்னியர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.  அன்புமணி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து, காடுவெட்டி குருவின் தாயார் கல்யாணி அம்மாள் போட்டியிடுவார் என சொல்கிறார் விஜிகே மணி.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்புமணிக்கு பெரும் தலைவலியாக மாறப்போகும் விஜிகே மணி என்ற தலைப்பில் நமது ஏசியாநெட் இணையதளத்தில் எழுதியிருந்தோம், அதில், பாமகவிலிருந்து வெளியேற்றப்பட்ட காடுவெட்டி குருவின் உறவினரான விஜிகே மணி, பாமகவை இரண்டாக உடைக்கும் முயற்சியில் குதித்துள்ளார்.  இதற்கு பாமகவின் தூணாக விளங்கிய குருவின் மகன் கனல் அரசனை வைத்தே ஆட்டத்தை தொடங்கியிருக்கிறார். வன்னியர்சங்க தலைவராக இருந்த குருவை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த வன்னியர்களை தன்வசம் வைத்திருந்தார் ராமதாஸ்,  இப்போது குருவிற்கு பக்கபலமாக இருந்த வன்னிய இளைஞர்களை மொத்தமாக வளைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். வன்னியர்கள் வாக்கு வங்கியை நம்பியே இதுவரை கூட்டணியும் தேர்தலையும் சந்தித்து வந்த பாமக இனி எப்படி சமாளிக்கப்போகிறது? 

விஜிகே மணியின் விஸ்வரூபமும், காடுவெட்டி குரு குடும்பத்தின் அரசியல் வருகையும் கண்டு மிரண்டுபோயுள்ளார்களாம் ராமதாஸும், அன்புமணியும். காரணம், வன்னியர்சங்கம் தான் பா.ம.க.வுக்கு அடித்தளமே. வன்னியர் சங்கத்தின் வாக்கு வங்கிதான் பா.ம.க.வின் வாக்கு வங்கியே இப்படி இருக்கையில் குறு குடும்பமும், பாமகவிலிருந்து வெளியேற்றப்பட்ட விஜிகே மணியும் இறங்கியிருப்பதால் பாமக இதுவரை சந்திக்காத போராடி விழும் என சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

ஒரு பக்கம், எப்படியும் அன்புமணியை தோற்கடித்தே தீரவேண்டும் என பிளான் போடும் குரு குடும்பம், மற்றொரு பக்கம் திமுக கூட்டணி, வன்னியர்கள்கள் வாக்குகளை மட்டுமே நம்பி நிற்கும் அன்புமணிக்கு எதிராக திமுக கூட்டணியில் வன்னியர் அல்லாத யார் நின்னாலும் டெபாசிட்டை காலி செய்து விடலாம் என்பதே திமுகவின் கணக்காம்.

click me!